அறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் அறிவிப்பால் பீதி

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
coronavirus, covid19, China, coronavirus news, coronavirus death, health,
சீனா,கொரோனா,வைரஸ்,கோவிட்19

பீஜிங்: சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் புதிதாக 1541 பேருக்கு 'கொரோனா' வைரஸ் பாதிப்பு உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில் 81 ஆயிரத்து 554 பேர் பாதிக்கப்பட்டனர்; அதில் 3312 பேர் உயிரிழந்தனர். 76 ஆயிரத்து 238 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். இப்படி மோசமான பாதிப்புகளை சந்தித்த சீனா பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியது. இதையடுத்து இங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பியது.

இந்நிலையில் சீன தேச சுகாதாரத்துறை ஆணையம் வெளியிட்ட அறிக்கை மக்களை பீதியடைய செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இந்த வைரசால் 1541 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர். அதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 205 பேரும் உள்ளடங்குவர். இவர்கள் யாருக்கும் வைரஸ் பாதிப்பிற்கான எந்த அறிகுறியும் இல்லை.


latest tamil newsஇதைத்தவிர வெளிநாடுகளில் இருந்து வந்த 35 பேருக்கும் உள்நாட்டில் ஒருவருக்கும் அறிகுறிகளுடன் கூடிய பாதிப்பு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக எண்ணிய நிலையில் சீன அரசின் இந்த அறிவிப்பு நாட்டு மக்களை மட்டும் அல்லாமல் இதர நாடுகளையும் கதிகலங்க செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
05-ஏப்-202022:47:41 IST Report Abuse
ocean kadappa india உனக்கு வேணும்னா சாக்கடகிட்ட போய் அதை முகர்ந்து பார். அதை ருசி பார் உனக்கு ஏற்றது அது தான். அரசாங்கத்தை குறை சொல்லாதே.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
05-ஏப்-202018:55:20 IST Report Abuse
Tamilnesan இப்படி பீதி மேல் பீதியை சீனா கிளப்பி விடுகிறதே..........எந்த ஒரு வல்லரசாவது சீனா மேல் பொருளாதார தடை விதிக்க ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டதுண்டா ? எல்லா வல்லரசுக்களுமே வெறும் வெத்து வேட்டுக்கள் என்பது கொரானா மூலம் நிரூபணமாகியுள்ளது.
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
03-ஏப்-202013:01:40 IST Report Abuse
Viswam ஆசிம்ப்டமாட்டிக் (அறிகுறி இல்லாத) கொரோனா பாசிட்டிவ் கேஸ் எல்லா இடங்களிலும் உள்ளது. சீனாவின் பீதி (பேதி) இவர்கள் ஊருக்குள் சுத்த ஆரம்பித்து அதனால் செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்துவிட்டால் என்ன ஆவது என்கிற கவலை உலகே பொருளாதாரத்தில் அவதி படும்போது நாங்கள் குணமாகிவிட்டோம், எங்கள் தொழிற்சாலைகள் இயங்குகின்றன இப்போது நிலைமை சகஜம் என்று பிலிம் காட்டுவது எல்லாம் கேலிக்கூத்தாகிவிடும். எப்போது வெளிநாட்டவரை ஹுபையிலிருந்து வெளியே அனுப்பி உலகமெங்கும் வியாதியை பரப்பிவிட்டார்களோ , அப்போதே அவர்கள் அடித்த பந்து திருப்பி வராமல் போகாது என்று தோன்றியது. எல்லா நாடுகளும் இனி சீனாவிற்கு ஜனங்கள் போவதற்கு தடை விதிக்காமல் அங்கிருந்து வர மட்டும் ஒரு வருடம் தடை விதிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X