பொது செய்தி

இந்தியா

கொரோனா நிவாரண நிதிக்கு 100 சதவீத வரி விலக்கு

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020
Share
Advertisement
pm cares fund, pm cares fund link, coronavirus india, PPF, coronavirus crisis


புதுடில்லி : பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பை சமாளிக்க, 'PM CARES Fund' எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியத்தை ஏற்படுத்தி, அனைவரும் தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி, நிதியுதவி அளிப்போருக்கான வரிச் சலுகை குறித்த விபரம்:


latest tamil news
ஒருவர், நன்கொடை அளிக்கும் தொகைக்கு, வருமான வரி சட்டம், 80ஜி பிரிவின் கீழ், 100 சதவீத வரி விலக்கு கிடைக்கும். நடப்பு நிதிஆண்டின் வருவாயில், வரிச் சலுகை பெறுவதற்கு தகுதி பெறுவார். மொத்த வருவாயில், 10 சதவீத வரி கழிவிற்கான வரம்பு, நன்கொடைக்கு பொருந்தாது எனவும், மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
வரும், ஜூன், 30 வரை அளிக்கப்படும் நன்கொடைக்கு, கடந்த, 2019--20ம் நிதியாண்டிற்கான வருமான வரியில், கழிவு கோரலாம்.

ஒருவர் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு நிதி வழங்கலாம். மின்னணு முறையில் பின்வரும் கணக்கில் பணம் செலுத்தலாம்.
Account Name: PM CARES, Account Number: 2121PM20202, IFSC Code: SBIN0000691, SWIFT Code: SBININBB104, Name of Bank & Branch: State Bank of India, New Delhi Main Branch.

அத்துடன், 'PM CARES Fund'ன் pmcares@sbi. என்ற 'யு.பி.ஐ., - ஐ.டி.,' மூலமாகவும் பணம் செலுத்தலாம். இவை தவிர, www.pmindia.gov.in. வலைதளத்தில், 'நெட் பேங்கிங், டெபிட், கிரெடிட் கார்டு' வாயிலாகவும் நன்கொடை வழங்கலாம்.l யு.பி.ஐ., வழியாக, பீம், போன் பே, அமேசான் பே, குகூள் பே, பேடிஎம், மொபிக்விக் உள்ளிட்ட மொபைல் 'ஆப்'கள் மூலமாக நிதி தரலாம்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X