புதுடில்லி: மார்ச் 31-ம் தேதியுடன் பணி நிறைவு பெறும் மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பதவிக்காலம் நீட்டிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பு நடவடிக்கை காரணமாக மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணி காலம் நீட்டிக்கப்படலாம் என கூறப்பட்டது.
இது குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தலைமை செயலருக்கு மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அனுப்பியுள்ள கடித்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் ஒய்வு பெறும் மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் அதே நாளில் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர், அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யபடாது. தவிர ஊரடங்கு காரணமாக வீ்ட்டிலிருந்து பணியாற்றினாலும் மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொருந்தும் இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.