ரேஷனில் இன்று முதல் 'கொரோனா' நிவாரணம்

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை: ரேஷன் கடைகளில் 'கொரோனா' நிவாரண தொகை இன்று(ஏப்.,2) முதல் வழங்கப்பட உள்ளதால் எந்த புகாரும் ஏற்படாதபடி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25 முதல் இம்மாதம் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வேலைக்கு
Tamil Nadu, TN news, corona crisis,TN, தமிழ்நாடு,ரேஷன்கடை,நிவாரணம்

சென்னை: ரேஷன் கடைகளில் 'கொரோனா' நிவாரண தொகை இன்று(ஏப்.,2) முதல் வழங்கப்பட உள்ளதால் எந்த புகாரும் ஏற்படாதபடி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25 முதல் இம்மாதம் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு கால நிவாரணமாக அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஏப். மாதத்திற்கு உரிய அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.



latest tamil news


அவை ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் இன்று முதல் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட உள்ளன. ஒரு கடையில் 1300 -- 1500 கார்டுதாரர்கள் உள்ளன. நிவாரணம் வழங்கும்போது கடைகளில் கூட்டம் சேரக் கூடாது என்பதற்காக எந்த தேதி நேரம் வர வேண்டும் என்ற 'டோக்கன்'களை கார்டுதாரர்களின் வீடுகளுக்கு ரேஷன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் வழங்கியுள்ளனர்.



ஒவ்வொரு கடையிலும் தினமும் தலா 100 கார்டுதாரர்கள் என ஏப்., 15ம் தேதி வரை 35 ஆயிரத்து 244 கடைகள் வாயிலாக 2.01 கோடி கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குறிப்பிட்ட துாரத்திற்குள் கார்டுதாரர்களை நிற்க வைப்பதற்காக அடையாள குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

ஜோக்கின்   பெர்னாடோ     திருச்சி இவர்களின் அறிவிப்புகள் எல்லாமே குழப்பமாக உள்ளது ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட கூடாது என்கிறார்கள் ஆனால் அம்மா உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம் ஹோட்டல் ல் கோரோனோ பரவுமாம் ஏன் அம்மா உணவகம் மூலம் கோரோனோ பரவாதா நான் அதிமுக காரன் தான் இந்நேரம் ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் நிர்வாகம் வேறு மாதிரி இருந்திருக்கும் ஆனால் இந்த கஷ்ட்ட காலத்திலும் ஜெயலலிதா அம்மா ஆரம்பித்த அம்மா உணவகம் தான் மக்களுக்கு உதவி செய்கிறது
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
02-ஏப்-202016:45:21 IST Report Abuse
vnatarajan ஆலந்தூர் 12 சோனில் 156 வார்டு முகலிவாக்கம் கிருஷ்ணவேணி நகரில் உள்ள கார்டுதாரர்களுக்கு இன்றுவரை டோக்கன் வழங்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
02-ஏப்-202015:41:31 IST Report Abuse
ocean kadappa india கொடுக்கும் பணத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டாமா. வங்கி சிலிண்டர் கணக்குகளில் சேர்த்தால் மறந்து போகும் கையில் வாங்கிய பணத்தில் தான் கவனமிருக்கும். தேர்தல் வரை கவனமிருக்கும். சோழியன் குடுமி சும்மா ஆடாது. கொரோனாவுக்காக கார்டுதாரர்கள் வரிசையில் சற்றைய இடைவெளியில் நிற்பதில் குடியா முழுகி விடும்.. சாதாரண நாட்களில் கியூவில் நிற்காமல் உட்கார்ந்தா ரேஷன் பொருட்களை வாங்கினார்கள். கொஞ்சம் சலுகை காட்டினால் தலை மேல் ஏறி உட்கார கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X