பொது செய்தி

இந்தியா

குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Baby names, Corona, Lockdown, Coronavirus, COVID19, UP, UP news, Odd news,  பெயர், குழந்தைகள், கொரோனா, வைரஸ், லாக்டவுன், ஊரடங்கு, கோவிட்19, உபி

லக்னோ: கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் இரு குடும்பங்கள், தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு, ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர்சூட்டியுள்ளனர்.

உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், இந்த ஊரடங்கு சமயத்தில், உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு ‛கொரோனா' என பெயர் சூட்டியுள்ளனர். அதேபோல், தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ‛லாக் டவுன்' என பெயரிட்டுள்ளனர். பாப்லு திரிபாதி மற்றும் ராகினி திரிபாதி தம்பதிக்கு ஊரடங்கு அமலான நாளில் பெண் குழந்தை பிறந்தது. இதனால், குழந்தையின் மாமா, ‛கொரோனா' என பெயர் சூட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையின் சின்னமாக இருப்பதால், குழந்தையின் தாயிடம் அனுமதி பெற்று கொரோனா என பெயரிட்டேன், என்றார்.


latest tamil news


‛லாக் டவுன்' குழந்தையின் தந்தை, பவன் கூறுகையில், 29ம் தேதி மாலை, நான் என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன், அங்கு அவர் ஒரு அழகான ஆண் குழந்தையை பிரசவித்தார். நாம் அனைவரும் கொரோனா தொற்றுநோய்க்கு ஆளாகி வருவதால் குழந்தைக்கு லாக் டவுன் என பெயரிட்டேன். என்னை பொறுத்தவரையில், கொடிய வைரஸிலிருந்து நம்மை காப்பாற்ற, முழு நாட்டிலும் ஊரடங்கு விதிக்க பிரதமர் மோடி, சரியான நடவடிக்கை எடுத்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தங்களையும் தேசத்தையும் காப்பாற்றவும், என் மகன் அனைவருக்கும் நினைவூட்டுவான். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
02-ஏப்-202019:06:12 IST Report Abuse
.Dr.A.Joseph இது தவறு.பெயரை மாற்றி பெற்றோர்களை எச்சரிப்பு செய்யுங்கள். Dont encourage them please .
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
02-ஏப்-202017:39:45 IST Report Abuse
rajesh எப்பிடி இந்த மாதிரி யோசிக்க தோணுது
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
02-ஏப்-202017:39:47 IST Report Abuse
rajesh எப்பிடி இந்த மாதிரி யோசிக்க தோணுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X