பொது செய்தி

இந்தியா

ஊரடங்கை எதிர்கொள்ள ‛கோவிட் சோல்ஜர்' போட்டி: ஹரியானா அரசு அறிமுகம்

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020
Share
Advertisement
CoronaVirus, COVIDSoldiers, Haryana, Haryana Govt, COVID19, lockdown, quarantine, 21days,
 கொரோனா, வைரஸ், ஹரியானா, கோவிட் சோல்ஜர், அரசு, போட்டி

சத்தீஸ்கர்: ஊரடங்கு நாட்களை பயனுள்ள வகையில் எதிர்கொள்ள ஹரியானா அரசு, ‛கோவிட் சோல்ஜர்' போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், அத்தியாவசிய பணிகளை தவிர்த்து, அனைத்து பணிகளும் முடங்கி போயுள்ளன. நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருந்து உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், ஹரியானா அரசு ஒரு போட்டியைத் தொடங்கியுள்ளது. மார்ச் 21ம் தேதியே தொடங்கிய இந்த போட்டியில் அசல் கவிதைகள், பாடல்கள், கதைகள் போன்ற வகைகளில் வீட்டில் இருந்தே பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஹரியானா அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை - https://haryana.mygov.in/ -ஐ பார்வையிடலாம். பங்கேற்பாளர்கள் கைகளை கழுவுதல், சமூக விலகல் மற்றும் கொரோனா தொடர்பான வதந்திகள் பரவாமல் தடுப்பது போன்ற சிறந்த சுகாதார நடைமுறைகள் குறித்த புதுமையான யோசனைகளையும் சமர்ப்பிக்கலாம். கடந்த 24 மணிநேரத்தில் ஹரியானாவில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் கூறுகையில், மார்ச் மாதத்தில் மாநிலத்திற்கு கிட்டத்தட்ட ரூ .3,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் எழும் சூழ்நிலையை அடுத்து இந்த எண்ணிக்கை ஏப்., மாதம் இரட்டிப்பாகும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X