பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றுபடுவதற்கான நேரம்: ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
சென்னை: ‛கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக நமது வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபடுவதற்கான நேரம் இது,' என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தியா முழுவதும் உள்ள
Coronavirus, AR Rahman, COVID19, cinema news, Tamil news,
 கொரோனா, வைரஸ், ஏஆர்_ரகுமான், ஏஆர்ஆர், ஒன்றுபடுவோம்

சென்னை: ‛கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக நமது வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபடுவதற்கான நேரம் இது,' என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற மனதுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த பயங்கரமான தொற்றுநோயை சமாளிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. நம்முடைய உயிரைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.


latest tamil newsஉலகத்தை தலைகீழாக மாற்றிய, இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக நமது வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபடுவதற்கான நேரம் இது. கடவுள் உங்கள் இதயத்திற்குள் இருக்கிறார். எனவே மத வழிபாட்டு தலங்களுக்கு கூடிவந்து குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல. அரசாங்கத்தின் ஆலோசனையைக் கேளுங்கள். சில வாரங்களுக்கான சுய தனிமை உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கான வாழ்க்கையை கொடுக்கலாம். நீங்கள் கொரோனாவை பரப்பும் கருவியாக இருக்காதீர்கள். சக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள். இந்த நோய் உங்களுக்கு வருவதற்கு முன் எந்த எச்சரிக்கையும் கொடுப்பதில்லை. எனவே நீங்கள் வைரசால் பாதிக்கப்படவில்லை என கருத வேண்டாம். சிந்தனையுடன் இருப்போம். பல லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை நம் கையில் உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஏப்-202019:00:37 IST Report Abuse
kulandhai Kannan மதவழிபாட்டுத்தலங்களில் கூடிகுழப்பம் விளைவிக்கும் தருணம் இதுவல்ல என்கிறார். அப்படியானால் மற்ற தருணங்களில் செய்யலாம் என்கிறாரா?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஏப்-202018:27:02 IST Report Abuse
Lion Drsekar எது எப்படியோ, ஒரு காலத்தில் எந்த ஜாதியாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் ஒரே குடும்பம் போல் வாழ்ந்து வந்தார்கள் இப்போதும் அப்படிதான் இருக்கிறார்கள், அவரவர்கள் மாற்று கோவில்கள் மற்றும் வழிபட்டு இடங்களுக்கு செல்லுதல் வேண்டுதல் என்று இருந்தார்கள், அதை பிரித்து வெள்ளைக்காரன் செய்தது போல் பிரித்து ஒருவருக்கொருவர் விரோத போக்கை தூண்டி பதவியை அனுபவித்து நாட்டை சீரழித்த பெருமையும் குறுநில மன்னர்களுக்கே போய்சேரும் , வந்தே மாதரம்
Rate this:
Cancel
Kathir - Chennai,இந்தியா
02-ஏப்-202015:57:12 IST Report Abuse
Kathir எழுதி கொடுத்து பேச சொல்லியிருப்பானுக .... போடா போய் வேலைய பாரு ...
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
02-ஏப்-202019:12:12 IST Report Abuse
தாண்டவக்கோன்இது என்னெ Union Budget ட்டாடா, எளுதி குடுத்தத ரெண்டு மணி நேரம் "நல்லா வாசி"க்கறதுக்கு ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X