கொரோனா தடுப்பு நடவடிக்கை: இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

ஜெனிவா: 'உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 9,35,957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,245 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும்' என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை அவர் பாராட்டி உள்ளார்.

தற்போதைய உலக நிலவரம் குறித்து ஜெனிவாவில் நேற்று இரவு உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:latest tamil news
பொருளாதார பாதிப்பு


பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தாலும் அப்பகுதிகளின் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவை வைரசால் மிகவும் தீவிரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த நாடுகளில் கொரோனாவைக் கண்டுபிடிக்கவும், பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கவும் போதுமான உபகரணங்கள் இல்லை.


latest tamil news
கடன் நிவாரணம் வழங்கணும்!


இதே போன்று பல நாடுகளில் குறிப்பாக ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் ஊரடங்கின் போது மக்களை அரசு பெரிதாக ஆதரிக்க முடியாத நிலை உள்ளது. வேலையிழந்த தினக்கூலிகள் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் இது போன்ற நாடுகளுக்கு ஆதரவளித்து கடன் நிவாரணம் வழங்குமாறு சர்வதேச சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாடுகளை ஆதரிப்பதற்கான ஒரு விரைவான செயல்முறையை நாங்கள் முன்மொழிகிறோம். இதனால், அந்த நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையாமலும் மக்கள் நெருக்கடியில் சிக்காமலும் இருப்பர்.


latest tamil news
5 வாரத்தில் இருமடங்கு பாதிப்பு


உலகம் முழுவதும் கடந்த 5 வாரங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்காத அளவு அதிவேக அதிகரித்துள்ளது. இதுவரை, 205 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவிவிட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது. அடுத்த சில நாள்களில் உலகளாவிய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தையும் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000-ஆகவும் இருக்கும். இந்தியாவில் எடுத்து வரும் மோடி அரசின் நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
'கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும்' என, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்திருப்பது, உலக நாடுகளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayon - Kajang,மலேஷியா
02-ஏப்-202019:23:27 IST Report Abuse
Mayon கைகளை அடுக்கடி கழுவச் சொல்லும் புண்ணியவான்கள் தங்கள் கைகளில் கட்டிய வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் மற்றும் கைக்கடிகாரம் இவற்றை அகற்றாமல் மற்றவர்களுக்கு அறிவுறை கூறுவது கிருமிகளைத் தடுக்குமா? கைகளை அடிக்கடி கழுவச் சொல்லும் புண்ணியவான்கள் தங்கள் கைகளில் கட்டிய வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் மற்றும் கைக்கடிகாரம் இவற்றை அகற்றாமல் மற்றவர்களுக்கு அறிவுறை கூறுவது கிருமிகளைத் தடுக்குமா?
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
02-ஏப்-202018:45:30 IST Report Abuse
chander ஏன் நீங்க கீ கொடுத்ததும் ஓடுகிற பொம்மை தலைவர்கள் இந்தியாவில் அதிகம் இருப்பதனால் இந்த பாராட்டு தில்லு இருந்தால் வட கொரியாவிடம் ஏதாவது சொல்லி பாருங்க பின்னியெடுத்திருவான்
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
02-ஏப்-202016:58:13 IST Report Abuse
vnatarajan Mr ஆப்பு .அவர்களே உலகளவில் மோடிக்கு புகழாரம் சூட்டப்படுவது உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லைபோலும். உண்மையை உலகத்தலைவர்கள் சொன்னால் உங்க வயறு பத்திகிட்டு எரிகிறதுபோல தெரிகிறது
Rate this:
02-ஏப்-202019:30:38 IST Report Abuse
நக்கல்ஆப்பு ஒரு 15 லட்சம் பைத்தியம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X