காஷ்மீர் குறித்து ஐநா கூட்டம்: பாகிஸ்தானை புறக்கணித்த சீனா

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
China, Pakistan, consideration, J&K, UNSC, kashmir, india, சீனா, பாகிஸ்தான், ஐநா, காஷ்மீர், புறக்கணிப்பு

பீஜிங்: மார்ச் மாதத்தில், ஐ.நா., பாதுகாப்பு சபைக்கு தலைமை வகித்த போதும், '' காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க ஐ.நா., பாதுகாப்பு சபையை கூட்ட வேண்டும்'' என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்க சீனா மறுத்துவிட்டது. காஷ்மீர் விவகாரத்தில், முன்பு பாகிஸ்தானின் கோரிக்கைக்கு சீனா செவி சாய்த்து வந்தது.

ஐ.நா., பாதுகாப்பு சபை தலைவராக இருக்கும் சீனாவின் ஜங் ஜன்க்கு மார்ச் 9 ல் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி எழுதிய கடிதத்தில், காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல் மீறப்படுவதாக கூறியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால், ''இந்தியா பாகிஸ்தான் கேள்வி'' அடிப்படையில், காஷ்மீர் நடப்பது குறித்து அவசரமாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. கடந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா, அது குறித்து, ஐ.நா.,வில் மூடப்பட்ட அறையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்க ஏற்பாடு செய்தது. இதேபோன்று சில கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்த போதும், எந்த கூட்டத்திலும் முடிவு எடுக்கப்படவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் தலையிட சர்வதேச நாடுகள் மறுத்துவிட்டன.

ஐ.நா., தலைவருக்கு குரேஷி எழுதிய மற்றொரு கடிதத்தில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, காஷ்மீரில் அத்யாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும். தொலை தொடர்பு வசதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். ஆனால், பாகிஸ்தானின் கோரிக்கையை சீனா கண்டுகொள்ளவில்லை.


latest tamil news



கொரோனா வைரஸ், அச்சுறுத்தல் உள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்பட இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளன. இது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டங் வெளியிட்ட டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், கொரோனா வைரசை 'சீன வைரஸ்' என முத்திரை குத்துவதை இந்தியா ஏற்காது. இந்தியாவும், சீனாவும் ஒரே படகில் பயணம் செய்யும் கூட்டாளிகள். ஒருவருக்கொருவர் உதவ முயற்சி செய்யும் என தெரிவித்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
03-ஏப்-202013:21:44 IST Report Abuse
Viswam சீனாக்காரன் கொரானா பாதிப்புலேந்து வெளியே வர முயற்சி செய்யும்போது இம்ரானுக்கு காஷ்மீர் பிரச்சினை பத்தி பிட் போட்டு பார்க்க எப்படி முடியுதுன்னு தெரியலை. பாகிஸ்தான் ராணுவம் சொல்லிகுடுத்ததை சொல்லியாச்சு. என்ன பிரயோசனம்? ஒன்னும் நடக்கப்போவதில்லை இன்னும் ஒருவருஷத்துக்கு
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
03-ஏப்-202003:46:36 IST Report Abuse
 nicolethomson இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை என்ன செய்வது?
Rate this:
Cancel
சுந்தர் - Rajapalayam,இந்தியா
02-ஏப்-202019:21:26 IST Report Abuse
சுந்தர் நாடு தீ பிடித்து எரியும்போது மன்னன் பிடில் வாசித்தானாம். உலகமே ரணகளப்பட்டு அல்லோல கல்லோலப் பட்டுகொண்டிருக்கிறது. இவனுக்கு இப்ப இது ரொம்ப அவசியம்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
03-ஏப்-202005:14:18 IST Report Abuse
 Muruga Velநீங்க சொல்றது ரோம் நகர கதை ..பாகிஸ்தானில் வேற மாதிரி .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X