இந்தூர்: மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற டாக்டர்கள் உள்ளிட்ட
சுகாதார பணியாளர்கள் மீது பொது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்னர். இதில் 2 பேர் காயமடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா உள்ளதா என, சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர். டட்பதி பாகல் பகுதியிலும் 2 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி தனிமைபடுத்தப்பட்டுள்ளது.

அந்த பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற சுகாதார பணியாளர்கள் மீது அப்பகுதி மக்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் 2 பெண் டாக்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.