கொரோனாவுக்கு 6 வார பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
baby, coronavirus, Connecticut, america, united states, US, death, கொரோனா, பச்சிளம்குழந்தை, அமெரிக்கா,

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளது.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில், கடந்த வாரம் உடல்நிலை குறைபாட்டால் ஆறு வார சிசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அக்குழந்தைக்கு நடத்தப்பட்ட சோதனையில், செவ்வாயன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் புதனன்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.


latest tamil newsஇச்செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ள, அம்மாநில கவர்னர் நெட் லாமண்ட், 'இந்த வைரஸ், எங்களை மிகவும் கருணை இல்லாமல் தாக்குகிறது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள இளம் வயது உயிரிழப்பு இதுவாகும். இந்த மனதை உருக்கும் சம்பவம், மக்கள் வீட்டிலேயே இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. உங்கள் வாழ்க்கையும் மற்றவர்களின் வாழ்க்கையும் அதைச் சார்ந்தது. இந்த கடினமான நேரத்தில் குழந்தையின் குடும்பத்தினருக்காக பிராத்திகிறோம்.' என கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரை கொரொனா வைரஸ் தாக்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 884 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நியூயார்க் நகரம் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் மட்டும் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
02-ஏப்-202016:30:52 IST Report Abuse
dandy இவர்கள் எல்லோரும் எதோ உடல் நல குறைவில் இருப்பவர்கள் இதனால் தான் மரணம் அதிகம் எடுத்ததெற்கெல்லாம் CORONA மரணம் என்று எழுத வேண்டாம் ஐரோப்பாவில் 90வயதானவர்கள் கூட car ஒட்டி சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவது சாதாரணம்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஏப்-202014:52:33 IST Report Abuse
Tamilan ஜாதி, மதம், இனம், பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடு எதுவும் பாராமல் அனைவரையும் சமமாக மதித்து சமத்துவத்தை, அரசியல் சட்டத்தை தூக்கி நிறுத்தும் கொரானாவுக்கு கோவில் கட்டி கும்பிடுவது மட்டும் தான் பாக்கி. கொரானாவால் பாதிக்கப்பட்ட உலகை காக்க, உலகில் உள்ளவர்களை குளிர்விக்க அதை தமிழக பி ஜெ பி தலைமையில், தமிழர்கள் முன்னின்று நடத்தலாம்
Rate this:
காவல்காரன்: சுடலைஏங்க வேறு கட்சியினர் யாருமே முன் வரமாட்டார்களா?...
Rate this:
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஏப்-202020:36:43 IST Report Abuse
Tamilanகோவிலுக்கு பிஜேபி . சமத்துவத்துக்கு தமிழ் . அதனால்தான் தமிழ் பிஜெ பி ....
Rate this:
Cancel
Sanjay - Chennai,இந்தியா
02-ஏப்-202014:50:37 IST Report Abuse
Sanjay வைரஸின் விபரீதம் தெரியாமல் வைரஸ் இல்லை என்று நம்பும் சில கூட்டத்தை என்ன வென்று சொல்வது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X