பொது செய்தி

இந்தியா

ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Coronavirus, Corona, Railway, Train, Travel, Train Ticket, Reservation, curfew, travel ban, Lockdown, ரயில், ரயில்வே, டிக்கெட், முன்பதிவு, தொடக்கம், விளக்கம், ஊரடங்கு,

புதுடில்லி: ஏப்.,15க்கு பிறகான ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படவே இல்லை என ரயில்வே அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்.,14 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பஸ், ரயில், விமான உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன. பயண முன்பதிவு டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டன. சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஏப்.,14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்து விடுமா என்ற ஆவலும் சந்தேகமும் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. ஆனால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சில ஊடகங்கள், ஏப்.,15க்கான ரயில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளன. அது தவறானது. ஊரடங்கு நாட்களான மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை தவிர்த்து மற்ற நாட்களில், ரயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்வது நிறுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தி கொள்கிறோம். அதே நேரத்தில், ஊரடங்கு நாட்களான மார்ச் 24 முதல் ஏப்.,14 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. அதற்கு பிந்தைய நாட்களில் (ஏப்.,15 முதல்) 120 நாட்கள் கால வரம்புக்கு உட்பட்ட நாட்களில் முன்பதிவு செய்வதை நிறுத்தி வைக்கப்படவே இல்லை. இவ்வாறு ரயில்வே அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
n Kannan -  ( Posted via: Dinamalar Android App )
02-ஏப்-202019:24:22 IST Report Abuse
n Kannan Not good move to open bookings for all age groups now. Sr citizens should not be allowed to travel for next fortnight. people should be asked come out gradually. first by active age groups who are working and that too they should be back by 7 p.m. All temples, churches, mosques may be dissuaded from offering prayers. people can pray at home for some more time.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02-ஏப்-202018:12:04 IST Report Abuse
A.George Alphonse இவிங்க சுத்தி வளைச்சு பேசுறத பார்த்தா நம்பும்படியாக தெரியலே.
Rate this:
Cancel
ராமகிருஷ்ணன் - madurai,இந்தியா
02-ஏப்-202017:14:07 IST Report Abuse
ராமகிருஷ்ணன் டெல்லி கும்பலின் பொறுப்பின்மையை பார்த்த பின்பு இந்த 144 ஐ இன்னும் 30 நாட்களுக்கு நீடித்தால் தான் பலனுண்டு என்று தோன்றுகிறது. 15ல் இந்த 144 ஐ நிறுத்தினால் பிறகு அதன் பலன் இல்லாது போய்விடும். அதற்கும் ஒரூ கூட்டம் அரசின் மீது குறை கூற அலையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X