சீனாவின் மரண எண்ணிக்கையை எப்படி நம்புவது? டிரம்ப் கேள்வி

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப் போர் வலுத்து வருகிறது. சீனா தரப்பில் சொல்லப்படும் மரண எண்ணிக்கையை நம்ப முடியவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரசை, 'சீன வைரஸ், வூஹான் வைரஸ்' எனக் சர்ச்சைக்குரிய வகையில் முத்திரை குத்தினார். இதற்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்த சீனா, 'அமெரிக்க ராணுவம் தான், கொரோனா வைரசை சீனாவில் பரப்பியது' எனக்கூறியது.


latest tamil news'கொரோனா வைரசால், தங்கள் நாட்டில், 82,361 பேர் பாதிக்கப்பட்டனர். 3,316 பேர் உயிரிழந்தனர்' என, சீனா கூறியுள்ளதாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இதுவரை, 2,06,207 பேருக்கு கொரோனா இருப்பதும், 4,542 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது.


latest tamil newsஅமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் பென் சாசே, 'சீனாவைவிட அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கிற தகவல் மிகத் தவறானது. சீனா கொரோனா உயிரிழப்பு குறித்து பொய் சொல்லியிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தை ஏற்கும் வகையில், அமெரிக்காவின் 'கொரோனா வைரஸ் டாஸ்க்' படையைச் சேர்ந்த மருத்துவர் டெபோரா பிர்க்ஸ், 'சீனா முக்கியமான தகவல்களையும் உண்மை நிலையையும் மறைத்ததால், சீனாவில் கொரோனா பரவியபோது, அதை ஒரு பிரச்னையாக மருத்துவ உலகம் பார்த்தது. ஆனால், இவ்வளவு பெரிய பிரச்னையாகப் பார்க்கவில்லை' என, சீனா மீது குற்றம் சுமத்தினார்.latest tamil newsஇந்நிலையில், வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசியதாவது:
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் குறித்து, அந்நாட்டு அரசு சொல்லும் எண்ணிக்கையை எப்படி நம்புவது. அவர்கள் சொல்லும் கணக்கு மிகவும் குறைவாக உள்ளது.
அமெரிக்கா சீனாவுடன் நல்ல நட்புறவு கொண்டுள்ளது. அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உடன் நான் நெருக்கமாகவே உள்ளேன். அதற்காக, சீனாவின் பொய்களை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


'கொரோனாவுக்கு எதிரான போரில், உலக நாடுகள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போதே, கொரோனா வைரசை முற்றிலுமாக அழித்தொழிக்க முடியும்' என, உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க, மற்ற நாடுகளை குறை சொல்லுவதிலும், எச்சரிக்கை விடுப்பதிலும் கவனம் செலுத்துவது, அபத்தமாக உள்ளதாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasan - doha,கத்தார்
02-ஏப்-202023:25:40 IST Report Abuse
vasan இது தான் நம் அரசியல் வியாதிகள் இதனை வருடம் ஆட்சி செய்த லட்சணம்/...மருத்துவ உபகரணம் தயாரித்து சமுத்தியாத்துக்கு கொடுக்க கூட நமக்கு திறமை இலலாமல் உலகின் மக்கள் தொகை கொண்ட நாடு...நாம் கற்ற கல்வி எதற்கு பயன் படுகிறது கேள்வி குறி தான் ......எங்கே நம் என்ஜினீயர்கள் சீனாவில் 8659 கம்பனிகள் குறுகிய காலத்தில் தொடங்கப்பட்டது ஒரு வேலை அவர்கள virusai பரப்ப போகிறோம் என்று தெரிந்து செய்து இருக்கலாம்.....ஆனாலும் இரவும் பகலும் உழைத்தால் நிச்சயமாக நாமும் உற்பத்தியை பெருக்கி தேவையை பூர்த்தி செய்யலாமே... இதில் எவ்வளவு கமிஷன் அடிக்க போறாங்களோ கடவுளே............
Rate this:
Cancel
manokaransubbia coimbatore - COIMBATORE,இந்தியா
02-ஏப்-202019:55:23 IST Report Abuse
manokaransubbia coimbatore கம்யூனிஸ்டுகள் வழக்கப்படி இன்னமும் 50 வருடம் கழித்து பொலிட்பீரோ கூட்டி அன்று கோரோனோ பிரச்சனையில் வரலாற்று தவறு செய்து விட்டோம் என்று ஒப்பு கொள்வார்கள் .அது வரை பொறுத்து கொள்ளவும்
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
02-ஏப்-202019:21:45 IST Report Abuse
K.Sugavanam அமெரிக்கா சீனா இரண்டு நாடுகளுமே கொரோனா விஷயத்தில் நம்பத்தகுந்த நாடுகள் இல்லை..இருவருமே சொல்வது உண்மை என எப்படி தெரிந்து கொள்வது. ஒருவரை மற்றவர் மாறி மாறி குற்றம் சாட்டுவது இதை உறுதி செய்கிறது..இதை நம்பி நாம் கவனம் சிதறாமல் நம்மை காத்துக்கொள்வதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X