பொது செய்தி

இந்தியா

ஹரியானாவில் சூயிங் கம் விற்பனைக்கு தடை

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020
Share
Advertisement
Covid-19, Haryana, chewing gum, coronavirus, Corona, India, precautionary measures, ஹரியானா, சூயிங்கம், விற்பனை, கொரோனாவைரஸ், கொரோனா

சண்டிகர்: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, சூயிங் கம் மெல்லுவதற்கும், விற்பனைக்கும் ஜூன் 30 வரை ஹரியானா அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா தொற்று இருமல், தும்மல் வழியாக நீர்த்திவலை மூலம் பரவ வாய்ப்புள்ள சூழலில், சூயிங் கம் மூலம் கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்புள்ளதால் தடை விதிக்கப்படுவதாக ஹரியானா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து எந்தவொரு வகையில் மற்றவர்களுக்கு பரவ கூடாதென்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றவர்கள் முன்னிலையில் எச்சில் உமிழ்வதை தவிர்க்க வேண்டும். தற்போதைய சூழலை கட்டுப்படுத்த தேவைப்படுவதால் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சட்டம் 2006ன் படி தடை விதிக்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அமன் தீப் சவுகான் தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதை போல குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு பயன்படுத்தவோ, விற்கவோ விதிக்கப்பட்ட ஓராண்டு தடையை அமல்படுத்துமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.கடந்தாண்டு ஹரியானா அரசு அனைத்து வகையான புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்திருந்தது.
கொரோனா பரவலை அடுத்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்துள்ளனரா என கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்துமாறு அரசு கேட்டு கொண்டுள்ளது. புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X