பொது செய்தி

இந்தியா

டில்லி மாநாட்டில் பங்கேற்ற 70 வெளிநாட்டினர் பீகாரில் பிடிப்பட்டனர்

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
Coronavirus, Corona, Bihar, India, Foreign Preachers, Delhi, Nizamuddin mosque, Nizamuddin conference, covid-19,  கொரோனா வைரஸ், பீகார், வெளிநாடு, மதகுருக்கள், நிஜாமுதீன், மாநாடு

பாட்னா: டில்லி மாநாட்டில் பங்கேற்ற 70 வெளிநாட்டு மதகுருக்கள் பீகாரில் பிடிப்பட்டனர்.கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகையே உலுக்கி வந்தாலும், இந்தியாவில் தற்போது அதிகளவு தொற்று பரவக் காரணமாக கருதப்படும் டில்லி நிஜாமுதீன் மசூதியில் நடந்த மத வழிபாட்டில் பங்கேற்றவர்களால் தான் அதிகளவு அச்சம் ஏற்பட்டுள்ளது.
மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என பலர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மாநாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், அதில் சிலர் மட்டுமே அடையாளம் காண முடிந்தது எனவும், பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.


latest tamil news


இதனால், மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதுவரை இவர்களுடன் தொடர்பில் இருந்த 9 ஆயிரம் பேர் மற்றும் 1300 வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட்டனர். இதில் பீகாரை சேர்ந்த 86 பேர் டில்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பீகாரிலும் வெளிநாட்டினர்களை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டது.
இந்நிலையில், பீகாரில் மாநாட்டில் கலந்து கொண்ட 70 வெளிநாட்டு மதகுருக்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தினர். இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 3 மாதங்களாக இந்தியாவில் பல மாநிலங்களில் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் எங்கெங்கு பயணம் செய்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை. இதனால், அவர்கள் பயணித்த பகுதிகளில் எல்லாம் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.mohan - coimbatore,அல்பேனியா
09-ஏப்-202019:25:33 IST Report Abuse
s.mohan அப்போ இவர்களில் (முல்லாக்கள்) எல்லோருமே தெரிந்தே தன் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருக்கின்றனர். அதாவது எனக்கு ஒருத்தனுக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை, ஆனால் இந்த வியாதியை ஒருவர் நூறு பேருக்காவது பரப்ப வேண்டும் என்பது இவர்கள் கொள்கை போலும். எப்படியோ இந்தியாவை நாசமாக்க முற்பட்டுவிட்டார்கள் என்பது நிதர்சனமாகிவிட்டது. இனியாவது இந்திய மக்கள் கட்சிகளை நம்பி ஏமாறாமல் நாம் எல்லோரும் ஒன்றாக இந்த மதவாத சக்திகளை ஒடுக்குவோம். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
07-ஏப்-202021:46:46 IST Report Abuse
SENTHIL உலகம் முழுவதும் இவர்கள் எண்ணம் ஒரே மாதிரியாக உள்ளதே. உஷார் மக்களே உஷார்
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
06-ஏப்-202017:02:24 IST Report Abuse
Raj இது ஒரு திட்டமிடப்பட்ட சதியாக கூட இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X