பொது செய்தி

இந்தியா

முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தது என்ன?

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மோடி, முதல்வர், பிரதமர்மோடி, ஆலோசனை,coronavirus, corona, covid-19, Prime Minister, Narendra Modi, Chief Minister, Corona update

புதுடில்லி : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஏப்.,14 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: மாநில முதல்வர்களுடனான ஆலோசனையின் போது, பிரதமர் மோடி, கொரோனா பரிசோதனை, தொற்று உள்ளவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தல் ஆகியவை அடுத்த சில வாரங்களுக்கு மிகவும் முக்கியமானவை. எனவே மாநில அரசுகள் அதில், கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பரவாமல் தடுப்பதற்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை. அதுபோல, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மக்களுக்கான அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மக்களுக்கான அத்யாவசிய பொருட்களின் கையிருப்பை கவனித்து கொள்வது அவசியம். ஊரடங்கு முடிந்த பின்னர், குறிப்பிடத்தக்க பாதுகாப்பு வழிமுறைகள் எடுக்கப்பட வேண்டும். ஊரடங்கை மாநில அரசுகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் எனக்கூறினார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsமோடி டுவிட்இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: நாளை காலை 9 மணிக்கு, நாட்டு மக்களுக்கு சிறிய வீடியோ செய்தியை பகிர உள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆறுமுகம்   சென்னை இப்போது எல்லாம் பிரதமர் ஆலசோனை பிரதமர் TV ல் மக்களுடன் பேச போகிறார் என்று செய்தி கேட்டாலே பயமாக இருக்கிறது ஊர் அடங்கு இன்னும் நீட்டிப்பதை பற்றி அறிவிக்க போகிறாரோ என்ற கவலையாக உள்ளது
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
02-ஏப்-202020:29:58 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் இங்கே விஜய பாஸ்கர் ஓரம் கட்ட பட்டார் அங்கே SLIM MAN அமித் அவர்களை ஓரம் கட்டி அதாவது கட்டம் கட்டி விட்டு ஓரம் கட்டி விட்டனர்
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
02-ஏப்-202021:11:20 IST Report Abuse
Vijayடேய் சிண்டுமூட்டி .. உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை .. சுடலை கானுக்கு ராவுல் வின்சி கு வோட் வாங்கி குறைய போகுது அது என்னனு பாத்து தடுத்து நிறுத்து .....
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
02-ஏப்-202018:50:22 IST Report Abuse
Nallavan Nallavan என்ன பேசி இருக்கப்போகிறார். ஒரு முதல்வருக்கு மூன்று நிமிஷமாம் இந்த மூன்று நிமிசத்தில் இவர்கள் சொல்லி அவர் என்ன விவரம் தெரிந்து கொள்ள போகிறார்
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
02-ஏப்-202021:13:16 IST Report Abuse
Vijayஇது என்ன வீட்டில் உக்காந்துகிட்டு ஆ உங்க தொகுதில கொரோனா எப்படி போகுதுனு வீடியோ கால் பேசுறதுனு நினைச்சியா .. அதையும் ஒருத்தன வச்சி வீடியோ எடுத்து விடுறது எதுக்கு டா இந்த விளம்பரம் .. நம்ம வாங்குற 5 பத்து க்கு இந்த விளம்பரம் தேவையா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X