அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

தெஹ்ரான்: கடந்த, 2018ம் ஆண்டு, ஈரான் மீது அமெரிக்கா, பொருளாதாரத் தடையை விதித்தது. ஏற்கனவே, பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த ஈரான், அமெரிக்கா விதித்த தடையால் மிகவும் பாதிக்கப்பட்டது.இந்நிலையில், ஆசிய நாடுகளில், சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள நாடாக ஈரான் மாறியுள்ளது. இதுவரை அங்கு, 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். 47,593 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி போதுமான மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.


latest tamil news


ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி, 'போதுமான மருத்துவ உபகரணங்கள் இன்றி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. இருந்தும் அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி, கொரோனாவைச் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறோம்' எனத் தெரிவித்திருந்தார்.


latest tamil news



'தீய சிந்தனைகொண்ட எதிரி'


கடந்த பிப்., மாதம், கொரோனாவைக் கட்டுப்படுத்த ஈரானுக்கு அமெரிக்கா உதவ முன்வந்தது. ஆனால், 'அமெரிக்காவிடமிருந்து எந்த உதவியையும் பெற மாட்டோம். தடையை விதித்துவிட்டு உதவி செய்வதாகக்கூறுவது விசித்திரமாகவுள்ளது. அமெரிக்கா தீய சிந்தனைகொண்ட எதிரி' என, ஈரான் அரசு தெரிவித்தது.
ஆனாலும், ஈரானிலிருந்து வரும் கொரோனா குறித்தான தகவல்கள், அமெரிக்காவின் தடையையும் மீறி, உலக நாடுகளை ஈரானுக்கு உதவிக்கரம் நீட்டச் செய்திருக்கின்றன.


latest tamil news



அமெரிக்காவின் நட்பு நாடுகள்


அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கும், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் மருந்துகள், மருத்துவ உபகரணங்களை ஈரானுக்கு அனுப்பிவைத்துள்ளன. அமெரிக்கத் தடையை மீறி, அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஈரானுக்கு உதவிய விவகாரம், சர்வதேச அரசியலில், மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.



latest tamil news


'அனைத்து நாடுகளும் பகையை மறந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்தால் மட்டுமே, கொரோனா எனும் கொலைவெறி பிடித்த வைரசை அழித்தொழிக்க முடியும். அந்த வகையில் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுள்ளது பாராட்டுக்குரியது' என, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-ஏப்-202022:49:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //அமெரிக்காவின் தடையையும் மீறி, உலக நாடுகளை ஈரானுக்கு உதவிக்கரம் நீட்டச் செய்திருக்கின்றன// A new alliance is forging and it is a welcome sign for the good.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-ஏப்-202022:48:21 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உலகின் முதல் தீவிரவாத நாடு அமெரிக்கா தான் .. இங்கே இருக்கும் அரசியல்வியாதிகளை கொரோனா வைத்து காலி பண்ணிட்டா போதும். உலக க்ஷேமம் வெகுதூரத்தில் இருக்காது. இயற்கைக்கே தாங்கலை, ஊழித்தாண்டவம் ஆடுறா.. நன்றி தாயே..
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
02-ஏப்-202020:02:29 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அமெரிக்கப்பெண்கள் அழகில்லை ஈரானிய பெண்கள் அழகானவங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X