அரசியல் பிளவுகளை உண்டாக்கும் நேரம் இதுவல்ல; சோனியாவை சாடும் ரவிசங்கர்

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (45) | |
Advertisement
புதுடில்லி: 'நாடே கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்றிருக்கும் போது, அரசியல் பிளவுகளை உண்டாக்கி ஏதாவது செய்ய வேண்டிய சந்தர்ப்பம் இதுவல்ல' என காங்., தலைவர் சோனியாவை, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சாடினார்.கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சித்துள்ள காங்., தலைவர் சோனியா, திட்டமிடப்படாத ஊரடங்கு உத்தரவால்,
RaviShankarPrasad,Sonia,lockdown,coronaupdate,covid19India,Indiafightscorona,coronaviruscrisis,coronavirusupdate,quarantine,21days,curfew,india,PM,Modi,

புதுடில்லி: 'நாடே கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்றிருக்கும் போது, அரசியல் பிளவுகளை உண்டாக்கி ஏதாவது செய்ய வேண்டிய சந்தர்ப்பம் இதுவல்ல' என காங்., தலைவர் சோனியாவை, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சாடினார்.

கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சித்துள்ள காங்., தலைவர் சோனியா, திட்டமிடப்படாத ஊரடங்கு உத்தரவால், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையில்லாத குழப்பமும் வேதனையும் ஏற்பட்டுள்ளது என விமர்சித்தார்.



latest tamil news


இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிரான போரில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு போராடி வருகிறது. பல்வேறு சிரமங்கள் இருந்த போதிலும், நாட்டு மக்கள் ஊரடங்கை முழுமனதுடன் வரவேற்றுள்ளனர்.



நாடு இத்தகைய ஒற்றுமையை காட்டும் நேரத்தில், காங்., தலைவர் சோனியா ஊரடங்கை விமர்சித்துள்ளது தேவையில்லாதது. அரசியல் பிளவுகளை உருவாக்கி, ஏதாவது செய்ய வேண்டிய சந்தர்ப்பம் இதுவல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (45)

Rafi - Riyadh,சவுதி அரேபியா
04-ஏப்-202013:05:51 IST Report Abuse
Rafi கொரோனாவிற்கு எதிராக உண்மையாக அக்கறையுடன் போராடனும் என்றால் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அறிவித்து விட்டால் மக்கள் அதற்கு தயாராக பாதுகாப்புடன் இருப்பார்கள்,
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
03-ஏப்-202003:40:34 IST Report Abuse
 nicolethomson இன்று கருநாடகத்தில் விவசாயிகளை குறிவைத்து கிளப்பி விடும் செயலை காங்கிரசார் செய்து வருகின்றனர் , இதுதான் ஐயத்தை ஏற்படுத்துகிறது
Rate this:
Cancel
Raj - Tirunelveli,இந்தியா
03-ஏப்-202002:10:31 IST Report Abuse
Raj Who is this guy RaviShankar? Millions of people on the road and he did not his mouth to help them but raising his voice now.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X