புதுடில்லி: கொரோனா வைரசை வைத்து காங்., மலிவான அரசியல் செய்வதுடன் மக்களை தவறாக வழி நடத்துகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அமித்ஷா கூறி இருப்பதாவது: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கொரோனாவை எதிர்த்து போராட பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகின்றன. இது உள்நாட்டில் மட்டுமல்லாது உலகளவிலும் பாராட்டை பெற்று வருகிறது. கொரோனாவை விரட்டியடிக்க 130 கோடி இந்தியர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் இதிலும் மலிவான அரசியல் செய்வது சரியல்ல. அவர்கள் மக்களை தவறாக வழி நடத்துவதற்கு பதிலாக தேசிய நலனை பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறி உள்ளார்.

முன்னதாக காங் கட்சியினரிடையே வீடியோ கான்பரன்சிங்கில் பேசிய சோனியா மருத்துவ நிபுணர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் கிடைக்க வேண்டும்.உள்கட்டமைப்பு இல்லாததால் அல்லது ஆயத்தமாக இருப்பதால் தொற்று பரவல் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாது என்பதை உறுதிசெய்வதற்கான பொறுப்பு அரசாங்கத்தின் மீது உள்ளது என்றும்,முன்னோடியில்லாத வகையில் சுகாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியின் மத்தியில் நாடு உள்ளது அவர் கூறி இருந்தார்.