'ஐரோப்பாவில் இறந்த 95% மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்'

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
WHO,Coronavirus,Europe,coronavirusupdate,கொரோனா,ஐரோப்பா

ஜெனீவா: ஐரோப்பாவில் இறந்த 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள், 60 வயதுக்கு மேற்பட்டர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட உயிர்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 203 நாடுகளுக்கு பரவி உள்ளது. 9.65 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக பலி 50 ஆயிரத்தை நெருங்குகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். ஐரோப்பாவில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது.


latest tamil newsஇந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறுகையில், 'ஐரோப்பாவில் கொரோனாவால் இறந்த 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 10% முதல் 15% வரை மிதமான அல்லது கடுமையாக கொரோனா பாதிக்கிறது' எனத் தெரிவித்துள்ளது.


மறுப்பு:


ஆனால் இதனை மறுத்துள்ள டாக்டர் ஹான்ஸ் க்ளூக், 'வயதானவர்களை மட்டுமே கொரோனா கடுமையாக பாதிக்கிறது என்ற கருத்து உண்மை இல்லை. கொரோனா தாக்கி தீவிர சிகிச்சை தேவைப்பட்ட இளைஞர்களில் சிலர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்கள்' எனத் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
02-ஏப்-202022:52:46 IST Report Abuse
Subburamu Krishnaswamy Aged people had been denied with available limited medical life support to save the youngsters. That is also a good concept.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02-ஏப்-202021:51:40 IST Report Abuse
A.George Alphonse கிழவர்கள் என்று சரியாக கவனிக்காமல் போனதே இதற்கு காரணமே தவிர கரோனா வைரஸ் தாக்கத்தால் அல்ல.நமது நாடு போன்று வயதான பெற்றோரை நமது நாட்டு பிள்ளைகள் கவனிப்பதுபோல் இந்த நாட்டு பிள்ளைகள் கவனிக்காமல் விட்டதே இதுபோன்ற 60 ப்ளஸ் வயதினர் சாவதற்கு காரணமாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X