கொரோனாவால் உத்தவ் தாக்கரேவுக்கு புது சிக்கல்

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

மும்பை : கொரோனா தொற்று காரணமாக மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அரசியலில் புதுவித சிக்கல் ஏற்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதுடன் தனிநபர் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பையொட்டி பல்வேறு சிக்கல்களையும் மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மஹா., முதல்வரான உத்தவ் தாக்கரேவுக்கும் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



மஹா.,முதல்வராக உள்ள உத்தவ் தாக்கரே, சட்டசபை உறுப்பினராக இல்லாதபோது கடந்த நவ., மாதத்தில் மாநில முதல்வராக பொறுப்பேற்றார். விதிப்படி அவர் ஆறு மாத காலத்திற்குள் தேர்தலை சந்தித்து சட்டசபை உறுப்பினராக வேண்டும். அதன்படி அவரது 6 மாத கால அவகாசம் வரும் மே 28 உடன் முடிகிறது. ஆனால் கொரோனா பரவலால் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலையில் மஹா., அரசு உள்ளது. இது தாக்கரேவுக்கு அரசியலில் சிக்கலை உண்டாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆறு மாத கால அவகாசத்தை நீட்டிக்கவும் சட்டத்தில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05-ஏப்-202009:21:34 IST Report Abuse
skv srinivasankrishnaveni மக்களை வீடியோகானபிரெஸ்னஸ் மூலமா அழைச்சு தான் சி எம் ஆஹா தொடரலாமா என்றுகேட்டால்போதுமே
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
03-ஏப்-202007:27:05 IST Report Abuse
அசோக்ராஜ் கொரோனாவினால் நாடு இருக்கும் நிலையில் யாரும் போட்டிக்கு வரப்போவதில்லை. சம்சாரத்தை ஒரு மாசம் நாற்காலியில் உட்கார்த்தி பக்கத்து நாற்காலியிலிருந்து இயக்கலாம். புண்ணியவான் லாலு வழி காட்டியிருக்கான்.
Rate this:
Ray - Chennai,இந்தியா
07-ஏப்-202017:08:44 IST Report Abuse
Rayஇவன் ரொம்ப புத்திசாலியா இருக்கான்...
Rate this:
Cancel
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
03-ஏப்-202005:07:07 IST Report Abuse
Agni Kunju சட்டம் வானத்தில் இருந்து குதிக்கவில்லை... நாம் உருவாக்கியது தான். இது போர்க்காலம் இந்த நேரத்தில் ஏட்டுப்படி நடப்பது எல்லாவற்றிர்க்கும் பொறுந்தாது... விதி மீறல் தேவை என்றால் சட்டமாக்குங்கள்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஏப்-202007:29:32 IST Report Abuse
meenakshisundaramசிங்கப்பூர்லே இப்படித்தான் தாங்கள் உருவாக்கின சட்டத்தினை தாங்களே மீறுவார்களா? வேற மனுஷன் யாருமே இந்த பல்லக்கு தூக்குற வேலைக்கு கிடைக்க மாட்டானா ?...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
04-ஏப்-202009:59:32 IST Report Abuse
 Muruga Velஅக்கினிலே பொரிஞ்சுடாதோ .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X