பொது செய்தி

தமிழ்நாடு

11,12 ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில் 11 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்து உள்ளன.



latest tamil news




தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஏப்.,14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 2 ல் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கி மார்ச் 24 ல் முடிந்தது. தொடரந்து மார்ச் 4 லெ் 11 ம் வகுப்பு தேர்வு துவங்கியது. 11 ம் வகுப்பில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 82 மாணவ மணிகளும், 12 ம் வகுப்பில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 மாணவ மணிகளும் பொதுத் தேர்வு எழுதினர்.


latest tamil news



தமிழகத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 12 ம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 11 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31 ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டு பிறகு ஏப்., 7 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என அறிவித்திருந்தது. ஊரடங்கு அமலில் உள்ளதால் விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஏப்-202011:15:41 IST Report Abuse
ஆப்பு விடைத்தாள்களை பத்திரப் படுத்தவும். சித்தாண்டிகள் சுத்திக்கிட்டிருக்காய்ங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X