திட்டமிடாமல் ஊரடங்கு அமலால் மக்களுக்கு பாதிப்பு: சோனியா

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (60+ 87)
Share
Advertisement
Sonoa,congress,covid19,coronaupdate,covid19India,Indiafightscorona,coronaviruscrisis,coronavirusupdate,lockdown,quarantine,21days,curfew,india,

புதுடில்லி: ''கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு தேவையான ஒன்று; ஆனால், மத்திய அரசு, எந்த வித திட்டமிடலும் இன்றி, ஊரடங்கை அமல்படுத்தியதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்,'' என, காங்கிரஸ் தலைவர், சோனியா கூறினார்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்த கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடந்தது.


பாதுகாப்பு கவசம்:


இக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர், சோனியா பேசியதாவது: இந்தியா மட்டுமின்றி, உலகமே இப்போது, இதுவரை இல்லாத சுகாதார ஆபத்தை சந்தித்து வருகிறது. கொரோனா பரவல் தொற்றை ஒழிப்பது, பெரும் சவாலாக மாறியுள்ளது. இதை வெற்றிக் கொள்வதில் தான், நம் ஒற்றுமையும், தைரியமும் அடங்கி உள்ளது.

கொரோனா வைரசை ஒழிக்க, இதுவரையிலும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சமூக விலக்கல் வழியாக தான், இந்த தொற்றை கட்டுப்படுத்த முடியும் என, டாக்டர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த கொரோனா பரவலை தடுக்க, ஊடரங்கு ஒன்று தான் ஒரே வழி. அது தேவையான நடவடிக்கையும் கூட. ஆனால், மத்திய அரசு, எந்தவித திட்டமிடலும் இன்றி அமல்படுத்தியது தான் தவறு. இதனால், ஏழைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள், உணவு மற்றும் தங்குவதற்கு இடமில்லாமல், தங்கள் கிராமங்களுக்கு, பல கிலோ மீட்டர் துாரம் நடந்து சென்றதை பார்த்த போது, இதயமே வெடித்து விட்டது. அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்வது, நம் கடமை. அவர்களுக்கு உதவி செய்துள்ள நம் கட்சியினர், சமூக அமைப்புகள், பொது மக்களுக்கு, என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களின் உயிரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள, டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு, போதிய பாதுகாப்பு கவசங்களை வழங்க வேண்டும். கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவனைகள், தயாராக உள்ள படுக்கைகள், தனிமைப்படுத்துவதற்கான வசதிகள், பரிசோதனை மையங்கள் ஆகிய விபரங்களை, மத்திய அரசு தினமும் வெளியிட வேண்டும்.

ஊரடங்கால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், அவர்களுக்கு தேவையான உரம் மற்றும் பூச்சி மருந்துகளை அரசு வழங்க வேண்டும்.


நடவடிக்கை:


கடன் பெறுவதற்கான வசதியை எளிமைப்படுத்துவோடு, காரீப் பருவ பயிர்களை பயிரிடவும், விவசாயிகளுக்கு உதவ வேண்டும். சிறு, குறு தொழில்கள் முற்றிலும் முடங்கிவிட்டன. பல லட்சம் ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கால் நடுத்தர மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பள குறைப்பு, வேலையிழப்பால், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடனுக்கான தவணை தான் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், வட்டி குறைக்கப்படவில்லை. தவணை ஒத்திவைப்பால் எந்த லாபமும் இல்லை. அதனால், மத்திய அரசு, பொது நிவாரண திட்டம் ஒன்றை அறிவித்து, செயல்படுத்த வேண்டும். அப்போது தான், சமூகத்தின் பல தரப்பு மக்களும், பயன் பெறுவர். கொரோனா தொற்றுக்கு, அரசியல், மதம், ஜாதி, வயது, பாலினம் என, எந்த வேறுபாடும் கிடையாது. இன்று அடுத்தவருக்கு தொற்றினால், நாளை நம்மை தொற்றும். அதனால், நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டும் தான், இந்த தொற்று நோயை விரட்ட முடியும். இவ்வாறு, சோனியா பேசினார்.


மன்மோகன் சிங்:


முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் பேசுகையில், ''தொற்று நோயால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்க, காங்கிரஸ், நாட்டுடன் இணைந்து நிற்கிறது,'' என்றார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசுகையில், ''இடம் பெயர் தொழிலாளர்களுக்கான உணவு, இருப்பிடம் உட்பட, எந்த வசதியும் செய்து கொடுக்காமல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தவறு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காங்கிரஸ் கட்சியினர் உதவி செய்ய வேண்டும்,'' என்றார்.


வீடியோ கான்பரன்ஸ்:


காங்கிரஸ் பொதுச் செயலர், பிரியங்கா பேசுகையில், ''ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளர்கள், டில்லியிலிருந்து, உத்தர பிரதேசத்துக்கு நடந்தே திரும்பியது பெரும் வேதனை. ''போலீசார், அவர்களை அடித்து துன்புறுத்தியது பெரும் கொடுமை. தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில், மனித நேயம் கடைப்பிடிக்கப்படவில்லை,'' என்றார்.

கூட்டத்தில், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர், குலாம் நபி ஆசாத், லோக்சபா காங்கிரஸ் தலைவர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மூத்த தலைவர்கள், மல்லிகார்ஜுன கார்கே, ஏ.கே.அந்தோணி, சிதம்பரம், உட்பட பலரும், வீடியோ கான்பரன்ஸ் வழியாக பேசினர்.

Advertisement
வாசகர் கருத்து (60+ 87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
05-ஏப்-202017:40:53 IST Report Abuse
Swaminathan Chandramouli 26 /11 பாகிஸ்தான் டெர்ரரிஸ்ட்ஸ் கசாப் நம்மை தாக்கி ஏராளமான மக்களை கொன்ற போதும் யார் நாட்டை ஆண்டார்கள் காங்கிரஸ் தானே ஓட்டல் தாஜ் தாக்க பட்டபோது அயல் நாட்டவர் உள்பட அநேகம் பேர் சுடப்பட்டு இறந்தார்கள் அதுவும் நீங்கள் ஆண்ட போது தானே ஏன் நீங்கள் யதார்த்த நிலையை கையாண்டீர்கள் கசாபை பாதுகாக்க பதினோறாயிரம் கோடி ரூபாய்கள் செலவழித்தீர்கள் குற்றம் சொல்லுவதே காங்கிரஸின் பரம்பரை வழக்கம்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஏப்-202006:00:55 IST Report Abuse
meenakshisundaram 130 கோடி மக்களை கொண்டுள்ள நம் நாட்டில் ஊரடங்கு என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் ,உலகிலேயே இது மிகவும் அசாத்தியமான காரியம் ,இதில் சோனியா எதை திட்டமிடாமல் என்று சொல்கிறார் ?அரசியலில் இன்னும் அரிச்சுவடி கூட அறியாத இந்த பெண்மணியின் பின்னே ஒரு தேசிய கட்சியா?-''விளங்கிடும்'?
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
03-ஏப்-202022:07:34 IST Report Abuse
krishna Podhum adangu Ithalian kollai kumbal thalaivi. Un nara vaya thirakkadha.Enna veri un kumbalukku.Unga bommai adimai MMS Atchiyil indha Corona varama poiduche.Vada poche.Vandhirundha latcham kodi nidhi odhukki ellathayum kingpin pasi vazhikattudhalil aataya pottu irukkalam.Ellam nallapadiyadhan poitu irukku.Appadi pudikkallenna udane oru special flightil pasi sibal sudalai khan undi kulukki kejri ellarayam koopittukittu Un Ithaly poi coronavukku oru vaaram thangi idea kondu vaa.Indha kedu ketta desa virodha kollayar koodaram Congress Dhablik jamath maanadu pattri vaai thirakkafhu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X