நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்ற 400 பேருக்கு தொற்று உறுதி

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
TablighiJamat,Delhi,coronavirus,covid19

புதுடில்லி: 'டில்லியை அடுத்துள்ள, நிஜாமுதீனில் நடந்த தப்லிக் - இ - ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற, 400 பேருக்கு, 'கொரோனா' வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர், லவ்அகர்வால், நேற்று கூறியதாவது: நாட்டில், 24 மணி நேரத்தில், புதிதாக, 328 பேருக்கு, வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை, 12 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுதும், மொத்தம், 1,965 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற, 400 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தான், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, வேகமாக உயர்ந்து வருகிறது.

மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் டி.ஜி.பி.,க்களுடன், கேபினட் செயலர், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றவர்களை, போர்க்கால அடிப்படையில் கண்டுபிடிக்கும்படி உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தான், 400 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்களில், அதிகபட்சமாக, தமிழகத்தில், 173 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது தெரிய வந்துள்ளது. இதைத் தவிர, டில்லியில், 47; ராஜஸ்தானில், 11; அந்தமான் - நிகோபரில், 9; புதுச்சேரியில், 2; ஜம்மு - காஷ்மீரில், 22; தெலுங்கானாவில், 33; ஆந்திராவில், 67; அசாமில், 16 பேருக்கு, வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்றோர், அவருடன் தொடர்புடையோர் உள்ளிட்டோரை அடையாளம் கண்டு வருகிறோம். அனைவருக்கும், பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதனால், தொற்று உள்ளோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மாவட்ட அளவில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும், பிரதமர், நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். தேவையான அனைத்து மருத்துவ சாதனங்களும் கையிருப்பில் உள்ளன.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

உலக அளவில், வைரஸ் தொற்று மற்றும் பலி பட்டியலை ஒப்பிடும்போது, இந்தியாவில் பாதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது தெரியவந்துள்ளது. உலக அளவில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு, 120 பேருக்கு தொற்று உள்ளது. இந்தியாவில், 10 லட்சம் பேரில், ஒருவருக்கே தொற்று உள்ளது. பலி எண்ணிக்கையிலும், உலக சராசரி, 10 லட்சம் பேருக்கு, 6ஆக உள்ளது. ஆனால், இந்தியாவில், இது, 0.04 சதவீதமாக உள்ளது.


latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil newsடில்லியில் 219 பேர் பாதிப்பு:


டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 219 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 51 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். நிஜாமுதீன் பகுதி யிலிருந்து, 2,346 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில், 108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
03-ஏப்-202023:25:26 IST Report Abuse
Charles அத்துமீறினால் கடவுளும் காப்பாற்ற மாட்டார் என்பதற்க்கு ஒரு பாடம்
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
03-ஏப்-202022:10:46 IST Report Abuse
krishna Indha 400 perayum encounterla pottu mela anuppungappu.lvangalukku mela 72 kannigal waiting.Adhai naam een keduppanen
Rate this:
Cancel
gajendra - Beijing,சீனா
03-ஏப்-202020:33:29 IST Report Abuse
gajendra crucial 10days for India
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X