பொது செய்தி

தமிழ்நாடு

மளிகைப் பொருட்களுக்கு தமிழகம் முழுதும் தட்டுப்பாடு! கிடைக்கும் ஒன்றிரண்டின் விலையும் உச்சம்

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
Tamil Nadu, groceries, grocery, lockdown, quarantine,curfew, Coronavirus, Shortage of grocery, vegetables, fruits, high price, Corona, covid-19, ஊரடங்கு,மளிகை,கட்டுப்பாடு

சென்னை: தமிழகம் முழுதும், மளிகை பொருட்களுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் ஒன்றிரண்டு பொருட்களின் விலையும், உச்சாணியில் இருப்பதால், பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுபோன்ற முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், மாநில அரசு, 'ரவுசு' காட்டுவதாக, பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேநேரத்தில், ஏழை மக்களுக்கு தரப்படும் இலவசங்களுக்கு, சொந்தம் கொண்டாடி, ரேஷன் கடைகளில், கரை வேட்டிகள் குவிவது, மக்களின் வேதனையை அதிகரித்துள்ளது.

'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், அத்தியாவசிய பொருட்கள், மக்களுக்கு கிடைக்கும் வகையில், மளிகை கடைகளை திறக்க, அரசு அனுமதி வழங்கியுள்ளது.


போக்குவரத்து முடக்கம்:


வசதி படைத்தவர்கள், அந்த கடைகளில் இருந்து, இரு மாதங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஊரடங்கு காரணமாக, சாலை போக்குவரத்து முடங்கியுள்ளதால், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், ஆந்திரா, மஹாராஷ்டிரா, ம.பி., போன்ற பிற மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு போதிய அளவுக்கு வரவில்லை; அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், மளிகை கடைகள் திறந்திருந்தாலும், எண்ணெய், புளி, பருப்பு வகைகள் போன்ற, முக்கிய பொருட்கள் இல்லாததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிடைக்கும், ஓரிரு பொருட்களும், உச்சாணி விலையில் விற்கப்படுவதால், சாதாரண மக்களால் வாங்க முடியவில்லை.


டெலிவரி:


சென்னை, மதுரை போன்ற மாநகராட்சிகள், தனியார் அங்காடிகளுடன் பேச்சு நடத்தி, மளிகைப் பொருட்களை, வீடுகளுக்கு, டெலிவரி செய்யும் வகையில், அங்காடிகளின் பெயர், அவற்றின் தொலைபேசி எண்களை, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக வெளியிட்டுள்ளன. அந்த அங்காடிகளும் அலம்பல் செய்கின்றன. மக்கள் தொடர்பு கொண்டால், 'குறைந்தது, 3,000 ரூபாய்க்கு மேல், ஆர்டர் கொடுத்தால் தான் எடுத்து வரப்படும்' என்றும், 'சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் இல்லை' என்றும் கூறுகின்றன.

ஊரடங்கு காரணமாக, மளிகைப் பொருட்கள் கிடைக்காமல், மக்கள் சிரமப்படுவதால், உணவு மற்றும் கூட்டுறவு துறைகளின் சார்பில் நடத்தப்படும், பல்பொருள் அங்காடிகளில் இருந்து, வீடுகளுக்கு நேரடி, 'டெலிவரி' செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், உணவு துறையின் கீழ் செயல்படும், நுகர்பொருள் வாணிப கழகம், அமுதம் என்ற பெயரில், 22; அம்மா அமுதம் என்ற பெயரில், 72 பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகிறது. கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும், கூட்டுறவு சங்கங்கள், 180 பல்பொருள் அங்காடிகள்; 143 அம்மா சிறு அங்காடிகள்; 653 ரேஷன் கடைகளை ஒட்டி, சிறு பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகின்றன.


குறைந்த விலை:


அந்த அங்காடிகளில், அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெய், மஞ்சள், உப்பு, புளி, மிளகாய் துாள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், வெளிச்சந்தையை விட, சற்று குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு உள்ளன. பள்ளி சத்துணவு மையங்கள், அங்கன்வாடி ஊழியர்கள் வாயிலாக, அரசு பல்பொருள் அங்காடிகளில் இருந்து, முக்கிய மளிகைப் பொருட்களை, மக்களின் வீடுகளுக்கு, நேரடியாக விற்க, அரசு முன்வர வேண்டும்.


வருவாய்:


இவ்வாறு செய்வதன் வாயிலாக, அந்த ஊழியர்களுக்கு வருவாய் கிடைப்பதுடன், அனைத்து தரப்பு மக்களுக்கும், குறைந்த விலையில், மளிகைப் பொருட்கள் கிடைக்கும். இதுபோன்ற முக்கிய பிரச்னைகளிலும், மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்து, ரவுசு காட்டும் விதமாக, தங்கள் கட்சி கரை வேட்டிகள் வாயிலாக, ரேஷன் கடைகளில், அரசு பணத்தில் தரப்படும் இலவசங்களுக்கு, மந்திரிகள், மாவட்ட செயலர்களின் படங்களை ஒட்டும் வேலையில், ஆர்வம் காட்டக் கூடாது என, சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.


முன்வருமா அரசு?


ஊரடங்கு காரணமாக, தற்போது, கூட்டுறவு துறை சார்பில், 119 வேன்களில், காய்கறிகள், மளிகைப் பொருட்கள், மக்களின் இருப்பிடங்களுக்கு அருகே சென்று விற்கப்படுகின்றன. இவை, அனைத்து தரப்பினரையும் சென்றடையாது. எனவே, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வாயிலாக, கூட்டுறவு மற்றும் வாணிப கழக பல்பொருள் அங்காடிகளில் இருந்து, முக்கிய மளிகைப் பொருட்களை, மக்களின் வீடுகளுக்கு நேரடியாக விற்க, அரசு முன்வர வேண்டும் என, கூட்டுறவு மற்றும் உணவு துறை வட்டாரம் தெரிவிக்கிறது.


நிதியும் இருக்கு!


அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் போது, ஏழை மக்கள் பாதிக்காமல் இருக்க, உணவு துறையின் கீழ், 2013ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, விலை கட்டுப்பாடு நிதியத்தை ஏற்படுத்தினார். அந்த நிதியத்திற்கு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. துவரம் பருப்பு, புளி போன்ற பொருட்களின் விலை உயர்ந்த போது, விலை கட்டுப்பாடு நிதியத்தின், நிதியில் இருந்து, பெரிய சந்தைகளில் மொத்தமாக வாங்கி, வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், குறைந்த விலைக்கு விற்கப்பட்டன.

இதனால், பொருட்களின் தட்டுப்பாடு நீங்கிய நிலையில், அவற்றின் விலையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை, அந்த நிதியில் இருந்து, 56 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது, ஊரடங்கு காரணமாக, மளிகைப் பொருட்களை வாங்கி, அவற்றை மக்களின் வீடுகளுக்கு, நேரடியாக டெலிவரி செய்வதற்கு, இந்த நிதியை பயன்படுத்தலாம்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
03-ஏப்-202021:01:34 IST Report Abuse
m.viswanathan இறைவா இந்த தேசத்தை அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் காப்பாற்று
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-ஏப்-202002:06:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அடுத்த தேசம் சாகட்டும்.. நீங்க எல்லாம் நல்லா வருவீங்கடா.. நல்லா வருவீங்க.....
Rate this:
Cancel
J.K.R -  ( Posted via: Dinamalar Android App )
03-ஏப்-202017:19:24 IST Report Abuse
J.K.R லோடு வண்டிக்கு பெர்மிஸ்ஸன் வாங்க இந்த சூழ்நிலையில் RTO office la 5000rs lancham கேட்கிறார்கள்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-ஏப்-202002:05:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அதை எப்படி சார் மாத்திக்க முடியும் என்கிறார்.. அமைச்சனுக்கு மண்டகப்படி பண்ணனும்.. இவனுங்களுக்கு சாவு வரமாட்டேங்குது.. சனியன் அப்புறம் எப்படி சாமி மேலே நம்பிக்கை வரும் ?...
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
03-ஏப்-202015:09:35 IST Report Abuse
Baskar சில மூளையே இல்லாத முண்டங்கள் அரசை வசை பாடுகின்றனர். போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும். எதற்கும் கவலைப்படாமல் எம்.ஜி.ஆர் ஆட்சி தொடரட்டும்.
Rate this:
Gopinathan S - chennai,இந்தியா
03-ஏப்-202017:52:48 IST Report Abuse
Gopinathan Sஅப்பா இது அம்மா ஆட்சி இல்லையா......LOL...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X