பொது செய்தி

தமிழ்நாடு

மதத்தை வைத்து பிரச்னை உருவாக்க வேண்டாம்: சத்குரு வேண்டுகோள்

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
Isha center, sadhguru, founder, religion, isha foundation, coronavirus, corona challenge, covid 19 crisis, சத்குரு,ஈஷா,ஈஷா_யோகா

கோவை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் இக்கட்டான சூழலில், மதத்தை வைத்து சமூகத்தில் தேவையற்ற பிரச்னையை உருவாக்க வேண்டாம் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: கொரோனா வைரசானது நம் தலைமுறையில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் ஜாதி, மதம் மற்றும் இனத்தின் பெயரில் ஒரு பிரிவினையை உருவாக்க கூடாது. ஏதோ, ஒரு குறிப்பிட்ட மதத்தினரால் தான் இந்த நோய் தொற்று பரவுகிறது என்ற தவறான செய்தியை நாம் பரப்ப கூடாது.


latest tamil news
உலகமே ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு இருக்கும் போது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்புரிய வேண்டியது அவசியம். அதைவிடுத்து, மதத்தை வைத்து சமூகத்தில் தேவையற்ற பிரச்னையை உருவாக்க கூடாது. இந்த விஷயத்தில் நாம் அனைவரும் மிகுந்த பொறுப்புணர்வோடும், விழிப்புணர்வோடும் நடந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரசால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படாமல், சிறிய அளவிலேயே இந்த பிரச்னையை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
03-ஏப்-202015:41:29 IST Report Abuse
s.rajagopalan ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த இஸ்லாம் அமைப்புகளாவது இந்த மாநாட்டை கண்டித்திருக்கிறதா ...இது வரை ? சப்பைக்கட்டு கட்ட நம்மிடையே உள்ள ரெண்டும் கெட்டார்கள் இருக்கிறார்கள். எப்போது இந்த வைரஸ் தலையெடுத்துவிட்டது என்று தெரிந்ததோ அப்போதே மூட்டை கட்டியிருக்க வேண்டாமா ? ....பாழாய்ப்போன வாக்கு அரசியல் ...கண்டும் காணாமல் இருந்தது ...அதன் தலைவன் என் ஓடி ஒளிந்து கொண்டு திரிகிறான். எந்த இஸ்லாமியனாவது அவனை காட்டி கொடுக்கலாமே ? மாட்டார்கள் ....அவர்களுக்கு நாடும் மக்களும் முக்கியமல்ல ...அவர்கள் மதம் ,,,மதம் ...மதம் பிடித்து .........விடுங்க ...திருந்த மாட்டானுவ ......
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
03-ஏப்-202015:15:54 IST Report Abuse
Palanisamy Sekar உலகத்தில் யாரோ பரப்பியிருக்கட்டுமே..அது இங்கே பிரச்சினை அல்ல சத்குருவே.. இங்கே இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நேரத்தில் யாரால் எந்த கும்பலால் கொரோனாவால் பாதிப்பு ஆனது என்பதுதான் மக்களிடையே உள்ள கோபம்.
Rate this:
Munna - Chennai,இந்தியா
03-ஏப்-202019:10:36 IST Report Abuse
Munnaகோவர்ன்மென்டை கேளுங்க சார் எப்படி வெளி நாட்டுலேர்ந்து காரோண காரங்க இந்தியாவுல வந்தாங்க...
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
03-ஏப்-202013:22:46 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை இவன் கூட்டத்தோட நிலைமை என்னன்னு இன்னும் கொஞ்ச NALLA THERIYUM.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X