புதுடில்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, பிரதமர் மோடி, ஏற்கனவே இரண்டு முறை, நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' பிரதமர் மோடி நேற்று பதிவிட்டதாவது: இன்று(ஏப்.,3) காலை, 9:00 மணிக்கு, முக்கியமான சிறு சிறு தகவல்களை நாட்டு மக்களுடன், 'வீடியோ' மூலமாக பகிர்ந்து கெள்ள திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு தொடர்பாக, பிரதமர் மோடி, சில முக்கியமான தகவல்களை தெரிவிக்கவுள்ளதாக, அனைத்து தரப்பினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.