புதுடில்லி: ஊரடங்கு முடிந்த பின்னர் ஏப்.,15ம் தேதிக்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 15ம் தேதிக்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதிக்கப்படும். இருப்பினும், எந்தெந்த நாடுகளிலிருந்து விமானம் வரும் என்பது, சூழலுக்கு ஏற்றபடி அனுமதி வழங்கப்படும். வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் விமானங்கள், ஊரடங்கு காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்பதிவுக்கு அனுமதி:
இந்நிலையில் விமான போக்குவரத்து துறை செயலர் பிரதீப் சிங் கரோலா கூறுகையில், 'ஊரடங்கு முடிந்த பிறகு மேற்கொள்ளும் விமான பயணங்களுக்கான முன்பதிவுகளை விமான சேவை நிறுவனங்கள் ஏற்கலாம். ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், முன்பதிவு ரத்து செய்ய வேண்டியது வரும்' என்றார்.