புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் டாக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சில நாட்களில் பிரசவிக்க இருக்கும் அவரது 9 மாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், 'எய்ம்ஸ் டாக்டரின் மனைவி தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிமையில் வைக்கப்பட்டிருக்கும் அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' எனக் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement