ஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் வேண்டுகோள்

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (326) | |
Advertisement
புதுடில்லி: ஏப்., 5 ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி, அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வீடியோ மூலம் பேசியதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மதித்து
PM Modi, Modi, narendra modi, pm Narendra modi, coronavirus, corona, collective strength, light lamp, covid 19, india fights corona, கொரோனாவைரஸ், கொரோனா, பிரதமர்மோடி, மோடி, நரேந்திரமோடி,

புதுடில்லி: ஏப்., 5 ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி, அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வீடியோ மூலம் பேசியதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மதித்து நடப்பவர்களுக்கும் நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவிக்கிறேன். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியாவின் ஊரடங்கு உலகிற்கு முன்னுதாரணமாக திகழந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராடும் மக்கள் கடவுளின் வடிவம்.


கொரோனா ஒழிப்பில் ஒன்றுபட்ட மக்கள்; முழு ஊரடங்கிற்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி. ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் மின்விளக்கை அணையுங்கள். அன்று டார்ச், அகல் விளக்குகளை வீட்டில் ஏற்றுங்கள்.

latest tamil news
வீடுகளில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களில், சிலருக்கு நாம் எப்படி கொரோனாவுக்கு எதிராக தனியாக போராட முடியும் என நினைக்கலாம். அது போன்ற கேள்வி அவர்களின் மனதில் எழும்? ஆனால் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள், யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்துள்ளோம். கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மார்ச் 22 அன்று, மக்கள் செலுத்திய நன்றி, மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக ஆனதுடன், அதனை அந்நாடுகள் பின்பற்றுகின்றன. மக்கள் ஊரடங்கு, மணியோசை எழுப்பியதன் மூலம், சவாலான நேரத்தில் நாடு ஒற்றுமையாக உள்ளதை உணர்த்தியது.


உலகிற்கே இந்தியா முன்மாதிரி


கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். கொரோனா வைரசை பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும். நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது. கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது.சமூக இடைவெளியை மக்கள் விட்டு கொடுக்கக்கூடாது.கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களின் ஏமாற்றத்தை போக்க வேண்டும்.


வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை எதிர்ப்பதில் நாடே ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது.வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கடவுளின் வடிவம். ஏப்ரல் 5ம் தேதி வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்கள், வீட்டின் நான்கு மூளைகளிலும் டார்ச், அகல் விளக்குகள், மொபைல் டார்ச் லைட், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்.

அப்போது அமைதியாக இருந்து நாட்டு மக்களை பற்றி சிந்திக்க வேண்டும் கொரோனாவால் மக்கள் இருண்ட நிலையில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு உதவி செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் ஒளியேற்றுவதன் மூலம் நாம் ஒற்றுமையாக இருப்போம் என காட்டுவோம். வெளியே வராமல் வீட்டு வாசல்அல்லது பால்கனியில் இருந்து மக்கள் ஒளியேற்றலாம். உற்சாகமாக இருந்து கொரோனாவை எதிர்த்துமக்கள் போரிட வேண்டும். உற்சாகத்தைவிட மிகச்சிறந்த சக்தி இல்லை. அனைவரும் உற்சாகமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

<

Advertisement
வாசகர் கருத்து (326)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை அழுகும் - சென்னை,இந்தியா
05-ஏப்-202002:07:01 IST Report Abuse
தாமரை அழுகும் என்னத்துக்கு லைட்டடிக்கணும் ன்னு சொல்லவே இல்லை
Rate this:
vennila - Dindigul,இந்தியா
05-ஏப்-202009:14:58 IST Report Abuse
vennilaநாளை பி.ஜே.பி. ஆரம்பித்த நாற்பதாம் ஆண்டு....
Rate this:
vennila - Dindigul,இந்தியா
05-ஏப்-202009:18:53 IST Report Abuse
vennilaஒரு கட்சியின் நாற்பதாம் ஆண்டு நிறைவு நாள்....
Rate this:
Cancel
Anbu - Kolkata,இந்தியா
04-ஏப்-202018:24:48 IST Report Abuse
Anbu கொரோனா தொற்று வந்திடப்போகுது-ன்னு தெரிஞ்சுதான் வண்ணாரப்பேட்டை முஸ்லீம் போராட்டத்தை சுடலை எட்டிப்பார்க்கவே இல்லைன்னு ஒரு பேச்சு அடிபடுதே.. உண்மையா ?
Rate this:
Cancel
Anbu - Kolkata,இந்தியா
04-ஏப்-202018:22:04 IST Report Abuse
Anbu விளக்கேத்தி டார்ச்லைட் காண்பித்தால் கொரோனா போய்டுமா-ன்னு கேட்குறவனெல்லாம் யாரு? ஜல்லிக்கட்டு போராட்டத்துல மெரீனாவில் ஒன்றாக மொபைல் பிளாஷ் லைட் காண்பித்தால் ஜல்லிக்கட்டை அனுமதிப்பாங்கன்னு லைட் அடிச்ச அதே பயபுள்ளைங்க தான் .......
Rate this:
தாமரை அழுகும் - சென்னை,இந்தியா
05-ஏப்-202007:29:47 IST Report Abuse
தாமரை அழுகும்ஜல்லிக்கட்டில் லைட் அடிச்சதுக்கு காரணம் அரசை தன் பக்கம் ஈர்க்க, இப்ப லைட் அடிப்பது கொரானாவை தன் பக்கம் ஈர்க்கவா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X