" கொன்று புதைப்பேன்" - பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (56) | |
Advertisement
மணிலா: கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சாலைக்கு வந்தால் அவர்களை நானே கொன்று புதைப்பேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டட்ரட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவரது பேச்சுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேல் பலியாகி உள்ளனர். 2 லட்சத்திற்கும் மேல்

மணிலா: கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சாலைக்கு வந்தால் அவர்களை நானே கொன்று புதைப்பேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டட்ரட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவரது பேச்சுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.latest tamil newsஉலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேல் பலியாகி உள்ளனர். 2 லட்சத்திற்கும் மேல் மீண்டுள்ளனர் . உலகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே வந்தால் அரசு தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வாகனங்கள் பறிமுதல் , கைது, அபராதம் என போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஆனால் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ கடுமயைாக எச்சரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:


இந்த கொரோனா மிக கொடூரமானது. ஆகையால் நாம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். சமூக மக்களை காத்திட வேண்டுமெனில் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். வந்தால் சுட்டுத்தள்ள ராணுவம் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். குறிப்பாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு நோய் தொற்று உள்ளவர்கள் வந்தால் நானே கொன்று புதைத்து விடுவேன். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.


latest tamil news

நாய் வண்டியில் அடைப்பு


சமீபத்தில் இங்கு ஊரடங்கை மீறியவர்களை பிடித்து நாய்களை அடைத்து கொண்டு செல்லும் வண்டியில் அழைத்து சென்றனர் என்ற சர்ச்சை இருந்து வரும் வேளையும் அதிபரின் பேச்சை மனிதநேய ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shanmugasundaram settu - tirupur,இந்தியா
09-ஏப்-202008:57:03 IST Report Abuse
shanmugasundaram settu குட் sir
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
10-ஏப்-202011:45:14 IST Report Abuse
VIDHURANஆமாம் இந்த மனித நேய ஆர்வலர்களுக்கு வேறு வேலையே இல்லை யார் என்ன சொன்னாலும் அது நல்லதா கேட்டதற்கா என்று கூட அறிந்து கொள்ளாமல் கண்மூடி தனமாக உலகம் முழுவதும் எதிர்ப்பதையே மட்டும் குறிக்கோளாக கொண்டு நடக்கும் ஒரு கூட்டம். முதலில் இவர்களை தண்டிக்க வேண்டும். பொறுப்பில்லாமல் எல்லாவற்றையும் மனித நேயம் என்று கூறும் இவர்களுக்கு மனிதர்கள் கொடிய வைரஸால் கொத்து கொத்தாக இறந்தால் அப்போதாவது சும்மா இருக்க முடியுமா? அதற்கும் ஏதாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதற்காகத்தான் சொல்கிறேன் இவர்களை கடுமையாக தண்டித்து விட்டு பிறகு அரசு கொரோன வைரஸை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05-ஏப்-202008:56:54 IST Report Abuse
skv srinivasankrishnaveni நீருவரை சுதந்திரமா திரிஞ்சமனுஷாளை 144 சத்தம்போட்டு ட்டு மீறினால் சுட்டுக்கொள்ளுவேன் என்று சொல்லும் இவனெல்லாம் ஜனாதிபதியா ??????????எங்க நாட்டுலே மோகிஜிஇ யோ கோவிந்த் ஜீ யோ இவ்ளோ கேவலமான வார்த்தைகள் யூஸ் பண்ணவே மாட்டாங்க எங்கே சி எம் சாட்டையால் அடிப்பேன் என்று சொல்லுறாங்க ஒருவேளை உங்களுக்கு ஒன்றுவிட்ட தம்பியாயிருக்குமோ ,மக்களெப்லீஸ் புரிஞ்சுக்குங்க ஆளுவோற்படும் பாட்டை ஒருபுறம் கொரோன அரக்கன் தாண்டவம் ஒருபுறம் ஒழுங்கினமா தன்னிஷ்டத்துக்கு விருப்பம்போல கேவலமா அசிங்கமா நடக்கும் சனங்கள் வாதநோய் அவ்ளோபயபககரம் என்றால் ப்ளீஸ் புரிஞ்சுக்குங்கய்யா போலீசும் ஆர்மயும் நர்சேஸ் டாக்டர்களும் மனுஷாலேதான் அவாளுக்கு உதவி செய்யாட்டியும் உபத்திரவம் செய்யவேண்டாம்
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
05-ஏப்-202005:38:50 IST Report Abuse
B.s. Pillai What he means is that strict action like this will be taken against those who got affected ignore social isolation knowingly. It is a very bad example. Our Muslim brothers should understand the seriousness of this pandemic and follow Government instructions .These instructions are only in interest of you and your family members. Namaz can be done inside the house. In all muslim countries, Prayer hall is available inside the office premises. The working muslims assemble here for prayers. When there is emergency, this can be performed inside the house. Please stick to this and do not come out of the house, jeopardising your health and your family members health. Those affected, should approach the medical team without any fear. Then you stand a better chance to come out of this disease.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X