பொது செய்தி

இந்தியா

நிபுணர் ஆலோசனையை கேளுங்கள்: பிரதமருக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள்

Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (159)
Share
Advertisement
பிரதமர்மோடி, ப_சிதம்பரம், சிதம்பரம், நரேந்திரமோடி, Chidambaram,  Narendra Modi, Modi, PM Modi, Prime Minister, India, Congress leader, Congress, Economy, Coronavirus, Corona, Covid-19, India fights Covid-19

புதுடில்லி: பொருளாதார வல்லுநர்கள், தொற்று நோயியல் நிபுணர்களின் ஆலோசனையை பிரதமர் மோடி கேட்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (ஏப்.,03) வீடியோ மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக நாடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது. நாம் தனிமையில் இருந்தாலும், ஒன்றிணைந்து நாட்டை பலப்படுத்தி கொண்டிருக்கிறோம். கொரோனா ஏற்படுத்தியுள்ள இருளை போக்கும் வகையில் வெளிச்சத்தை உண்டாக்குவோம். நாட்டு மக்கள் அனைவரும் ஏப்.,5 ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின்விளக்குகளை அணைத்து, மெழுகுவர்த்தி, அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் எனக்கூறினார்.


latest tamil newsஇது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: பிரதமர் அவர்களே, உங்கள் ஆலோசனையை நாங்கள் கேட்கிறோம். ஏப்ரல் 5ல் விளக்கேற்றுகிறோம். அதற்கு பதிலாக, தயவு செய்து பொருளாதார வல்லுநர்கள், தொற்று நோயியல் நிபுணர்களின் ஆலோசனையையும், எங்களின் கோரிக்கையையும் கேளுங்கள்,
ஏழைகள் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்களை அறிவிப்பீர்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஒவ்வொரு உழைக்கும் ஆண்களும், பெண்களும் மற்றும் தொழிலதிபர்கள் முதல் தினக்கூலிகள் வரை அனைவரும், சரிவடைந்து பொருளாதாரத்தை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக நீங்கள் அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றம் தான் கிடைத்தது. அவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்,Advertisement
வாசகர் கருத்து (159)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
04-ஏப்-202008:38:05 IST Report Abuse
madhavan rajan Good joke.
Rate this:
Cancel
kurinjikilan - Madurai,இந்தியா
03-ஏப்-202022:18:10 IST Report Abuse
kurinjikilan நிபுணர்களைக் கேட்காமலேயே ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளிய நீங்கள் இப்போது இப்படி கூறலாமா ?.உங்கள் குல தெய்வத்தின் இத்தாலி நாட்டிற்கு ஆலோசனை கூறுங்கள் கொரானாவை கட்டுப்படுத்த..
Rate this:
Cancel
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
03-ஏப்-202020:59:08 IST Report Abuse
Siva Subramaniam திரு சிதம்பரம்,சம நிலையை இழந்துவிட்டார். இழந்து பல நாட்கள் ஆகிவிட்டன. அதன் பின்விளைவுதான் இந்த மாதிரி பேச வைக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X