வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை அழைக்கும் அமெரிக்கா

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
America,US, Visa, doctors, corona, covid-19, world fights corona, Foreign Doctor, Corona outbreak, Coronavirus, கொரோனா வைரஸ், அமெரிக்கா, வெளிநாடு, டாக்டர்கள், அழைப்பு

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில் இணைந்து செயல்பட, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை அமெரிக்கா அழைக்க முடிவு செய்துள்ளது.

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், அமெரிக்காவையும் ஆட்டிப்படைக்கிறது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, அதில் 6,095 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாநில கவர்னர்கள் இணைந்து மருத்துவ பணிகள் குறித்த ஆணைகளில் கையெழுத்திட்டனர். அதாவது, வெளிநாட்டில் பிறந்த அல்லது வெளிநாட்டு உரிமம் பெற்ற டாக்டர்களுக்கு பயிற்சிக்காக தற்காலிக உரிமங்களை வழங்குவதற்கு ஆணையிட்டனர். இது தற்போதைய மருத்துவப் பணிக்குழுவின் அதிகபடியான அழுத்தத்தை குறைக்கும் முயற்சியாகவும், அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயத்தை எதிர்கொள்வதற்காகவும் இந்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.


latest tamil news


இதன்மூலம் ஜே-1 மற்றும் எச்-1-பி விசாக்களில் அமெரிக்காவில் உள்ள 1000க்கும் மேற்பட்ட இந்திய டாக்டர்கள் மற்றும் மருத்துவ பட்டதாரிகள் கொரோனா தொற்றை எதிர்க்கும் போரில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்றினால், டாக்டர்கள் பற்றாக்குறையை போக்கி சுமார் 4000 வெளிநாட்டு டாக்டர்களை நியமிக்கலாம். தற்போதுள்ள அமெரிக்க டாக்டர்களில் கிட்டத்தட்ட 10ல் மூன்று பேர் (29 சதவீதத்தினர்) வெளிநாட்டை சேர்ந்தவர்கள். மேலும், 22 சதவீதம் நர்சிங் உதவியாளர்கள் மற்றும் 38 சதவீதம் வீட்டு சுகாதார உதவியாளர்கள் ஆவார்கள். மொத்தத்தில், வெளிநாட்டிலிருந்து பிறந்த தொழிலாளர்கள் அமெரிக்க சுகாதார மற்றும் சமூக சேவை துறையில் 17 சதவீதத்தினர்.


latest tamil news



வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் பல கட்டுப்பாடுகள் உள்ள போதும், தாண்டவமாடும் கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கு வழிவகை செய்ய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை அழைக்கும் சூழலுக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், நியூஜெர்சியின் இந்த அறிவிப்புகள் தற்காலிகமானது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
03-ஏப்-202017:51:58 IST Report Abuse
Somiah M அமேரிக்கா தனது தேவைக்கு ஏற்ப மருத்துவர்களை உருவாக்குவதில்லை .இனிமேலாவது அந்த குறையை சரி செய்து கொள்ள வேண்டும் .
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
04-ஏப்-202006:29:27 IST Report Abuse
 Muruga Velஅமெரிக்காவில் மருத்துவ படிப்பு படிக்க பணமும் நல்ல மார்க்குகளை எடுத்தால் மட்டும் போதாது .. சேவை மனப்பான்மையோடு இருப்பதும் ஒரு தேவை .. நம்ம நாட்டில் அரசியல்வாதிகள் நடத்தும் மெடிக்கல் காலேஜ் போல அல்ல அமெரிக்க கல்லூரிகள் … முழுமையாக மருத்துவ படிப்பு படித்துவிட்டு வரும்போது நாற்பது வயதாவது ஆகிவிடும் .....
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03-ஏப்-202015:27:37 IST Report Abuse
ஆரூர் ரங் ரொம்ப நாளாக அமெரிக்காவில் டாக்டர்களுக்கு முக்கிய தலைவலி நோய்களல்ல. நோயாளிகள் போடும் நஷ்டயீட்டு வழக்குகளிலிருந்து தற்காப்புதான். DEFENSIVE MEDICINE தான்.இன்சூரன்ஸ் பிரீமியமே ஏராளம்.
Rate this:
Cancel
Information, UK - London,யுனைடெட் கிங்டம்
03-ஏப்-202014:33:58 IST Report Abuse
Information, UK அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளில் ஏன் மருத்துவ பணிகளுக்கு பஞ்சம் என்றால், முதலாவதாக அங்கு முதியவர்களை நன்கு கவனிக்க ஆட்கள் தேவை. இரண்டாவதாக அவர்களுக்கு கடினமான அல்லது அற்பணமான வேலை செய்ய விருப்பமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X