சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
China, national mourning day, Saturday, COVID-19, coronavirus, Covid-19 victims, Covid death toll, Corona, கொரோனாவைரஸ், கொரோனா, சீனா, துக்க தினம்

பீஜிங்: சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை (ஏப்ரல்.4) தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுமென சீன மாகாண கவுன்சில் அறிவித்துள்ளது.

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றால் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2.13 லட்சம் பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது இன்னுயிரை இழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஏப்.4 அன்று தேசிய அளவில் துக்க தினத்தை அனுசரிப்பதென முடிவெடுத்துள்ளதாக சீன மாகாண கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது
.


latest tamil newsசீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு திரும்பியவர்கள் மூலம் அங்கு கொரோனா மீண்டும் பரவி வருகிறது. இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உடல்நலக்குறைவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது கொரோனாவால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 870 ஆக அதிகரித்துள்ளது.சீனாவின் தேசிய சுகாதார கமிஷனின் அறிக்கையின் படி, 31 மாகாணங்களில் 81,620 பேர் புதிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 1,727 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 379 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. 3,322 பேர் உயிரிழந்துள்ளனர். 76,571 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவ துவங்கிய ஹூபே மாகாணத்தின் வுஹானில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஏப்-202020:25:38 IST Report Abuse
Usha vasu devan உங்கள் அஜாக்ரதையால் அல்லது தந்திரத்தால் உலகையே துக்கத்தில் ஆழ்த்திவிட்டீர்கள்.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
03-ஏப்-202019:54:10 IST Report Abuse
s t rajan எத்தனை பேரை நீங்களே கொனாறீர்களோ ? நோய் பரவியது தெரிந்தும் சரியான தருணத்தில் உலகிற்கு அறிவிக்காமலும், தொற்று பற்றியவர்களைத் தாராளமாக உலகின் பல பாகங்களுக்கு செல்ல விட்டும் மனித இனத்திற்கே துரோகம் செய்த சீனா இருக்கும் வரையில் அமைதியிருக்காது.
Rate this:
Cancel
03-ஏப்-202018:56:56 IST Report Abuse
ஆப்பு உலக துக்கதினம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X