1 மில்லியன் மதிப்புள்ள 'மாஸ்க்' தானமளித்த அர்னால்டு ..!

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

வாஷிங்டன் : கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவமனைகளுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் 1 மில்லியன் மதிப்பிலான முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தானமாக அளித்துள்ளார்.latest tamil news


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் போராடி வருகின்றன. தற்போது அமெரிக்காவை மையம் கொண்டுள்ள கொரோனா ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனாவுக்கு இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இக்கட்டான நேரத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள், தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.latest tamil news


அந்த வகையில் ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிபோர்னியா மாகாண கவர்னருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் பணிபுரிவோருக்கு 1.43 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தானமாக அளித்துள்ளார். ஒரு அறை முழுவதும் உள்ள பெட்டிகளில் என் 95 முகக்கவசங்கள் உள்ளன. இதனை ஒரு வாரத்திற்கு முன் ஆர்டர் செய்ததாகவும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க முகக்கவசங்கள் உதவுமென தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அர்னால்டு தெரிவித்துள்ளார்.latest tamil news


கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமெனவும். எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது என தொடர்ச்சியாக தனது சமூகவலைதளம் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த அர்னால்டு, மற்ற நடிகர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஏப்-202020:09:39 IST Report Abuse
ருத்ரா பிரம்மிப்பாக பெருமையாக உள்ளது. பாராட்டுக்கள் Sir
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
03-ஏப்-202019:34:47 IST Report Abuse
vbs manian தமிழக முன்னணி நடிகர்கள் இந்த செய்தியை படித்தால் என்ன நினைப்பார்கள்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஏப்-202018:50:30 IST Report Abuse
Endrum Indian ஒரு நடிகன் கொடுத்தது??நம்மூரில் இது வரை எந்த தமிழ் தமிழ் அல்லாத டாஸ்மாக்கினாட்டில் இருக்கும் நடிகர்கள் கொடுத்திருக்கின்றார்களா??பாவம் அவர்களே பஞ்சத்தில் அடிபட்டவர்கள்??அவர்களிடம் வெறும் ரூ 1250 கோடி , ரூ 850 கோடி , ரூ , 485 கோடி , ரூ 325 கோடி தான் (யார் யார் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்)இருக்கின்றது இதில் எப்படி அவர்கள் கொடுக்க முடியும்??ரூ. 90 லட்சம் கோடி,ரூ 5.4 லட்சம் கோடி ரூ 1.9 லட்சம் கோடி ரூ 15,000 கோடி அரசியல் வியாதிகள் கொடுக்காத போது நாங்கள் எல்லாம் ஒரு சின்ன நீர்க்குமிழி??என்ன நடிகர்களே சரிதானே?? இதோ நமது லட்சங்கள் கொடுத்தவர்கள் PM Cares, CM க்கு Name - PM - CM Rohit Sharma - 45 - 25 Kathik Aryan - 100 - Shilpa Shetty - 21 - Anita Dongre - 150 - Sabhayashchi Mukherjee - 100 - 50 Akshay Kumar - 2500 - VarunDhavan - 30 - Suresh Raina - 31 - 21 BCCI - 5100 - Ajinkya Rahane - 10 - Knagana Ranavat - 25 - Bhushan Kumar - 1100 - 100 Murad Khetani - 25 - 25 Vicky Kaushal - 100 - Prabhas - 300 - Mahesh Babu - 0 - 100 Sindhu - 0 - 5 Pavan Kalyan - 100 - 50 Kapil Sharma - 50 - Mukesh Ambani - 50000 - Heeraben Modi - 0.25 - Tata Group - 50000 - SBI - 10000 - IFFCO - 2500 - NAFED - 500 - Cello - 350 - JSW - 10000 - Patanjal - 2500 -
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X