பொது செய்தி

தமிழ்நாடு

144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்: முதல்வர் இ.பி.எஸ்.,

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (101)
Share
Advertisement
ஊரடங்கு, 144தடைஉத்தரவு, முதல்வர்இபிஎஸ், டோக்கன், கொரோனா, கொரோனாவைரஸ், corona, coronavirus, COVID-19, EPS, CM, Tamil Nadu, Chief Minister, Palanisamy, Section 144, Lockdown, Curfew

சென்னை: அத்தியாவசியமின்றி மக்கள் வெளியே வந்தால், 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களை முதல்வர் இ.பி.எஸ்., ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதி செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள தொழிலாளர்களை சந்தித்தேன். வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்து தமிழகத்தில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்துள்ளது. உணவு,உடை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.34 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர்.


latest tamil news
அத்யாவசிய பொருட்களை கொண்டு வருவதற்கு தடையில்லை. அவை, நமக்கு வேறு மாநிலங்களில் இருந்து வர வேண்டியுள்ளது. பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் இயக்கப்படாதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்யாவசிய பொருள் கொண்டு செல்வதற்கு மாநிலங்கள் தடை விதிக்கக்கூடாது என பிரதமர் கூறியுள்ளதால், பிரச்னை தீரும்.

சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோயின் வீரியத்தை புரிந்து கொள்ளாமல், சிலர் விளையாட்டு தனமாக டூவிலரிலும், கார்களிலும் பயணிக்கின்றனர். அரசு கேட்டு கொள்வதெலலாம் நோயின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை உணர வேண்டும். இந்த வைரசுக்கு எந்த மருந்தும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பரவாமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

144 தடை உத்தரவு என்பது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த அல்ல. மக்களை காக்கவே பிறப்பிக்கப்பட்டுள்ளது மக்களை காக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்யாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வரலாம் என்றாலும், தினசரி வர வேண்டிய அவசியம் இல்லை. ஒரு முறை வெளியே வரும் போது, ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். மக்கள் தான் இதனை கடைபிடிக்க வேண்டும். இது அவர்களின் கடமை. எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பது கிடையாது.இனிமேல் சட்டம் தன் கடமையை செய்யும். மக்களுக்கு அரசு எவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்க முடியுமோ அவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்கும்.மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க தவறினால் 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும். தடையை மீறி வெளியே வந்தல் 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும். அத்யாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது. தமிழக அரசு அறிவித்த நிவாரண பொருட்கள், ரேசன் கடைகளில் இந்த மாத இறுதி வரை வழங்கப்படும். வீடுகளுக்கு சென்று டோக்கன் கொடுக்கப்படும். அப்போதே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அரசு அங்கீகரித்த பத்திரிகையாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
04-ஏப்-202003:54:49 IST Report Abuse
Bharathi சீனாவுக்கு இவ்வளவு திமிர் வந்ததற்கு காரணம் அதன் பொருளாதார பலம். அதை உடைக்க வேண்டும். நம் மக்கள் சீன பொருட்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும். செய்வீர்களா?
Rate this:
Cancel
Tamilan - kailasa,இந்தியா
03-ஏப்-202020:14:09 IST Report Abuse
Tamilan மிக நல்லது .........தடை உத்தரவை கடுமையாக்குவது நல்லது ....பரவும் வேகம் குறையும்
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
03-ஏப்-202019:18:52 IST Report Abuse
Nallavan Nallavan விஜய் ஜோசப் மாஸ்டர் படவிழாவில் பல்லாயிரம் பேர் கூடி உள்ளனர் இதில் ஜொஸ்ப் சொந்தக்காரர் மலேசியாவில் இருந்து VANTHULLANAR, ஈஸா யோகா என்று நடனமாடிய நிகழ்ச்சியில் 5000 இதில் இத்தாலி ஸ்பெயின் என்று நிறைய பேர் வந்துள்ளனர் இதையும் சேர்த்து விசரனை செயுங்கள், அங்கே குஜராத் மோடி அண்ட் trump வந்து அமெரிக்கா போன பிறகு இரண்டு முறை CHECK UP செய்துள்ளனர் அப்போ மோடியை ஏன் செய்யவில்லை
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஏப்-202019:43:11 IST Report Abuse
Janarthananஉபி மூளை தனியா தெரிகிறது? ஏண்டா ஏதாவது என்றால் இந்நேரம் சிம்டம்ஸ் வெளியில் வந்து இருக்கும்? வர இல்லை என்றால் ஒன்னும் இல்லை என்று அர்த்தம் ???...
Rate this:
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
03-ஏப்-202019:52:42 IST Report Abuse
Nallavan Nallavanநீ என்ன டாக்டரா...
Rate this:
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
03-ஏப்-202019:59:32 IST Report Abuse
Nallavan Nallavanஅப்படினு WHO உங்களுக்கு தனியா சொன்னதா, சரி உங்கள் படி அந்த நிகழுவு (50+100+110) 260 indru 411 அப்போ மிச்சம் எப்படி டிஜிட்டல் ஊழல் கட்சி மூளையே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X