கொரோனா வைரசால் இந்திய-சீன வர்த்தகம் பாதிப்பு| Latest Movies Lifestyle LifeGoal Advisor Awards Swasth India #IndiaGives Win 1 Lakh - MC PRO Contest Mission Pani News18 >> India 2-min read India-China Trade Declines by 12.4% in First 2 Months of 2020 Amid Coronovirus Outbreak | Dinamalar

கொரோனா வைரசால் இந்திய-சீன வர்த்தகம் பாதிப்பு

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (3)
Share

பீஜிங்: கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா -சீனா இடையே வர்த்தகம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறப்படுவதாவது: சீனாமட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பின்னர் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இரு நாடுகளிடையேயான வர்த்தகம் சுமார் 12.6 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. கடந்த 2018 ம் ஆண்டில் 95.7 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகம் 92.68 ஆக குறைந்தது.latest tamil newsஇந்தியா பெரும்பாலும் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு சீனாவையே பெரிதும் நம்பி உள்ளது. அதே போல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வைர நகைகளில் 36 சதவீதம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாது கடல் உணவு பெட்ரோல் கெமிக்கல் போன்றவையும் இந்திய தயாரிப்புக்கான முக்கிய சந்தையாக சீனா திகழ்கிறது.


latest tamil newsஇது குறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் அதுல் தலகோட்டி கூறி இருப்தாவது: கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிற்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி வெகுவாக பாதித்துள்ளது. இது இந்திய மீன்வளத்துறையில் இழப்பை ஏற்படுத்தும் .மேலும் பிப்., முதல் ஏப்ரல் வரையில் நான்கு முக்கிய வர்த்தக நிகழ்ச்சி ரத்து செய்வது இந்தியாவின் வைர தொழிலுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்த கூடும் என கூறி உள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X