பொது செய்தி

இந்தியா

ஆயுர்வேத சிகிச்சையால் கொரோனாவிலிருந்து மீண்டாரா இளவரசர் சார்லஸ்?

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
PrinceCharles,Ayurveda,treatment,Minister,AYUSH,AYUSHdrugs,Covid19,இளவரசர்,சார்லஸ்,ஆயுர்வேதம்

புதுடில்லி: பெங்களூருவை சேர்ந்த ஆயுர்வேத நிபுணர் ஒருவர் பரிந்துரைத்த மருந்தின் மூலம், இளவரசர் சார்லஸ் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார் என ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார். ஆனால் இதனை இளவரசர் சார்லஸ் தரப்பு மறுத்துள்ளது.

உயிர் கொல்லி கொரோனா, உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரச குடும்பத்தையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறுகையில், 'பெங்களூரில் சக்யா எனும் ஆயுர்வேத நிலையத்தை நடத்தி வரும் நிபுணர் அளித்த, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்தை பிரிட்டன் இளவரசர் சார்லஸ் எடுத்துக் கொண்டார். இதன் மூலம் முழுவதுமாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார்.


latest tamil news



முறையாக பரிசோதிக்கும் முன் மருந்துகளை பரிந்துரைக்க நாங்கள் கூறுவதில்லை. அதனால் தான் எப்போதும் 'தடுப்பு மருந்து' என கூறி வருகிறோம். இதில் பக்கவிளைவுகள் இருக்காது. கொரோனா தடுப்பு மருந்தாக பலர் ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

பாரம்பரிய மருந்துகளால் கொரோனாவை ஒழிக்க முடியும். சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், 3 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய சிகிச்சையான டி.சி.எம்., முறையை பயன்படுத்தினர். இந்தியாவிலும் பாரம்பரிய சிகிச்சை முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மறுப்பு:


இந்நிலையில், அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் பேச்சை மறுத்துள்ள இளவரசர் சார்லஸின் செய்தி தொடர்பாளர், 'இளவரசர் சார்லஸ் ஆயுர்வேதத்தால் குணமடைந்தார் என்ற தகவல் தவறானது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் மருத்துவ ஆலோசனைகளை அவர் பின்பற்றினார்' என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
04-ஏப்-202008:24:42 IST Report Abuse
 Muruga Vel கமீலாவிடமிருந்து விலகி தனிமையில் இருந்ததால் தான் குணமடைந்தாரோ ...
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
06-ஏப்-202004:55:35 IST Report Abuse
Rajeshடயானா எப்படி இறந்தார் என்று சொல்லி பாவ மன்னிப்பு கேட்டால் ஒரு வேலை கர்மா இவரை விட்டுவிடும்........
Rate this:
Cancel
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
04-ஏப்-202005:51:04 IST Report Abuse
aryajaffna சீனாவால் இன்னும் முடியவில்லை என்றால் உங்களால் என்றுமே முடியாது என்பதை உணர வேண்டும்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-ஏப்-202002:50:44 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அப்போ அந்த மருந்தை என்னாத்துக்கு நம்ம மக்களுக்கு கொடுக்கல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X