அமேசான் பழங்குடிகளையும் எட்டிப்பிடித்த கொரோனா

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
பிரேசில்: பரந்து விரிந்த அமேசான் வனத்தில், பிரேசில் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இனக்குழுக்கள் வாழ்கின்றன. இப்பழங்குடிகள், வனவிலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ள, வனத்திற்குள் அருகருகே, மிக நெருக்கமாக தங்களது இருப்பிடங்களை அமைத்துள்ளனர். இந்தப் பழங்குடிகளில், 'கொகாமா' என்ற இனத்தைச் சேர்ந்த, 20 வயது பெண், கொரோனா வைரசால்

பிரேசில்: பரந்து விரிந்த அமேசான் வனத்தில், பிரேசில் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இனக்குழுக்கள் வாழ்கின்றன. இப்பழங்குடிகள், வனவிலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ள, வனத்திற்குள் அருகருகே, மிக நெருக்கமாக தங்களது இருப்பிடங்களை அமைத்துள்ளனர்.


latest tamil news



இந்தப் பழங்குடிகளில், 'கொகாமா' என்ற இனத்தைச் சேர்ந்த, 20 வயது பெண், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதை, பிரேசில் சுகாதாரத் துறை கடந்த 1ம் தேதி உறுதிசெய்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், 'மார்ச் 18ம் தேதி, மருத்துவர் ஒருவரைச் சந்தித்தேன். அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்து தனிமைப்படுத்தப்பட்ட அடுத்த மூன்று நாட்களில், எனக்கு கொரோனா அறிகுறிகள் தெரியவந்தன' எனத் தெரிவித்துள்ளார்.


latest tamil news



பிரேசிலைச் சேர்ந்த மேத்யூஸ் பெயிடோசா என்ற மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரோடு தொடர்பிலிருந்த, 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் கொகாமா இனத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



இந்த மருத்துவரும், அவருடன் இருந்ததால் பாதிப்புக்குள்ளானவர்களும், அமெசானில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களுக்கு கடந்த வாரத்தில் சென்று வந்துள்ளனர். இதனால், பழங்குடியின மக்களில் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக் கூடும் என, அஞ்சப்படுகிறது.பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழிடம் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் இருந்து, 24 மணிநேரம் படகுப் பயணம் செய்து வெளியே வந்தால் மட்டுமே அவர்களுக்கு, மருத்துவ வசதிகள் கிடைக்கும் நிலை உள்ளது.



latest tamil news



'குறுகிய எல்லைக்குள், வெளியுலகோடு அதிகத் தொடர்பின்றி வாழும் பழங்குடிகளுக்கு, அந்தப் பகுதியைத் தாண்டிய நோய்களை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்காது. இதனால், எளிதாகப் பாதிக்கப்படுவர். விரைவில் உயிரிழப்பும் ஏற்படலாம். அவர்களுடைய நெருக்கமான இருப்பிடமும் வாழ்க்கை முறையும் இந்த நோயை விரைவில் பரவச் செய்யும். உடனடியாக அந்தச் பழங்குடிகளை தனிமைப்படுத்தி, மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிரேசில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பழங்குடிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க, பிரேசில் அரசின் பழங்குடிகள் பாதுகாப்பு அமைப்பு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
04-ஏப்-202005:42:04 IST Report Abuse
aryajaffna இயற்கையுடன் ஒன்றி வாழும் இந்த மக்களுக்கு கொடூர கொரோனா தொற்றி இருப்பது கொடுமையிலும் கொடுமை.
Rate this:
Cancel
04-ஏப்-202002:23:30 IST Report Abuse
ஜெய் ஸ்ரீ ராம் அவங்க யாருக்காவது தொல்லை கொடுத்தாங்களா?? அவங்க பாட்டுக்கு வாழ்ந்துகிட்டு இருக்காங்க. அவங்களுக்கும் பரப்பிட்டீங்களேடா கேடு கெட்ட மனிஷன்களா.. அமெசான் காட்டை தான் விட்டு வைக்கலை. மனிஷங்களையுமா??
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
04-ஏப்-202001:21:34 IST Report Abuse
Pannadai Pandian அமேசான் பழங்குடி மக்களிடையே ஒருவருக்கு இந்த னாய் பரவினால், அந்த இனமே காலியாகிவிடும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு மிகவும் குறைவு. மருத்துவ வசதிகளும், செவிலியர்கள், மருத்துவர்கள், போக்குவரத்து மிக குறைவு. அரசும் ஐநாவும் துரிதமாக செயல் பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X