கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த அமெரிக்கா!

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
corona,vaccine,pittsburgh,scientists,US,America,coronavirus,covid19,கொரோனா,மருந்து,கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த பிட்ஸ்பர்க் அறிவியலாளர்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். எலிகள் மீது பரிசோதனை செய்யப்பட்ட இம்மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சீனாவிலிருந்து பரவத்துவங்கிய கொரோனா, இதுவரை 204 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் 10.54 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட, 55,711 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2,23,784 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நிலைமையை சமாளிக்க, பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.

இந்நிலையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆப் மெடிசன் அறிவித்துள்ளது. தங்கள் கண்டுபிடித்த மருந்துக்கு 'பிட்கோவேக்' எனப் பெயரிட்டுள்ள அதன் அறிவியலாளர்கள், எலிகளுக்கு இம்மருந்தை பரிசோதித்துள்ளனர். இரு வாரங்களிலேயே அதிகப்படியான எதிர்ப்பு சக்தியை எலிகள் பெற்றுள்ளதும், கொரோனாவை எதிர்த்து அழிக்கும் ஆற்றலை எலிகளுக்கு செலுத்தப்பட்ட இந்த மருந்தின் அளவே பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இதுகுறித்து கூறியுள்ள அதன் ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரியா, 'கொரோனா வைரஸ், சார்ஸ், மெர்ஸ் வைரஸ்களை ஒத்திருக்கிறது. அந்த இரு வைரஸ்களையும் அழிப்பதில் ஒரு குறிப்பிட்ட வகை புரதம் பெரும் பங்காற்றும் என்பது எங்களுக்கு தெரியும்' என கூறினார்.

தற்போதுள்ள இக்கட்டான நிலையில், இம்மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்க ஓராண்டு தேவைப்படாது. புதிய விதிகளால் இம்மருந்து பொதுப்பயன்பாட்டுக்கு விரைவில் வரும் என அதன் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
08-ஏப்-202010:57:12 IST Report Abuse
S. Narayanan அமெரிக்கா கேட்க்கும் மலேரியா மருந்தை கொடுத்து விட்டு அவர்களுடைய கண்டுபிடிப்பை பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம். பகை இல்லாமல் உறவை தொடரலாம்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
07-ஏப்-202010:34:17 IST Report Abuse
Tamilnesan இந்தியாவிற்கு விரைவில் இம்மருந்தை கொண்டு வர மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீண் விவாதங்களை தவிர்த்து செயலில் உடனே இறங்க வேண்டும். தபோதுள்ள மத்திய அரசு இயங்குகிற அரசு. எனவே நல்லது உடனே நடக்கும் என்று நம்புவோம். முந்தைய ஆட்சியின் ரோபோ பிரதமர் தற்போது இல்லை என்பதை அனைவரும் அறிந்ததே.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
06-ஏப்-202020:40:18 IST Report Abuse
ocean kadappa india அய்யா தனவான்களே அந்த பிட் கோவேக் மருந்தை சீக்கிரம் வெளி விடுங்களேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X