பொது செய்தி

இந்தியா

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஆதித்யா ரூ.500 கோடி நிதி உதவி

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

மும்பை: கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஆதித்யா நிறுவனம் ரூ.500 கோடி நிதி உதவி அளித்துள்ளது



latest tamil news




சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி பல்லாயிரக் கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நமதுநாட்டிலும் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதனையடுத்து பிரதமர் மோடி கொரோனா வைரசைஒழிப்பதற்கு நிதி உதவி அளிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.தொடர்ந்து திரை உலக பிரபலங்கள்,விளையாட்டுதுறையை சார்ந்தவர்கள் மற்றும் தொழில்துறையினர் தங்களின் பங்களிப்பை வழங்கிவருகின்றனர்.


latest tamil news




இந்நிலையில் ஆதித்யா நிறுவனம் கொரோனா வைரசை எதி்ர்த்து போராடுவதற்காக ரூ.500 கோடியை நிதியாக வழங்கி உள்ளது. இதில் 400 கோடி ரூபாய் பிரதமர் நிதி உதவிக்கும் 50 கோடி ரூபாயில் ஒரு மில்லியன் எண்ணிக்கையில் என்95 முகமூடிகள் மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு தந்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவர் ராஜஸ்ரீபிர்லா கூறியதாவது: தற்போதைய நிலமையின் தீவிரத்தை காணுகையில் சுகாதார உதவி நிதி மற்றும் பொருள் உதவிக்கான கட்டாய தேவை உள்ளது என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R D Moorthy - bukit batok,சிங்கப்பூர்
04-ஏப்-202005:04:48 IST Report Abuse
R D Moorthy இந்த அரசு முந்திய அரசு போல், ஊழல் இல்லாத அரசு அதற்கு சாட்சி லோக்பால், இந்த நன்கொடைக்கு கணக்கு உண்டு, நிச்சயம் ஊழல் இருக்காது,
Rate this:
Cancel
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
04-ஏப்-202004:12:32 IST Report Abuse
SanDan இதிலெல்லாம் ஏமாற்ற முடியாது. உங்கள் அரசியல் தானைத் தலைவர்கள், விஜய நடிகர்கள்தான் ஒரு பைசா தேறாமல் சேர்த்து வைக்கிறார்கள் அக்ஷய் குமார் ஏமாற்றியதில்லை என்றுமே
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
03-ஏப்-202022:45:16 IST Report Abuse
அசோக்ராஜ் நடிகர் அக்ஷய் குமார் பாராட்டு வாங்கிக்கிட்டு கிளம்பிட்டார். 25 கோடியில் ஒரு பைசா கூட வந்ததாக தகவல் இல்லை. அவருடைய டுவிட்டரிலும் pledge to contribute என்பதோடு சரி. பணம் கொடுத்து விட்டதாக அவரே கிளெயிம் பண்ணவில்லை. மோடியும் கண்டுகொள்ளவில்லை. ஓட்டுப்போடும் இயந்திரங்கள் பொய்யை விழுங்கி விட்டு அடுத்த பொய்க்கு காத்திருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X