ஊரடங்கு உத்தரவை மீறிய தந்தை மீது மகன் புகார்

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
lockdown,curfew,complaint,father,son,violating,Delhi,தந்தை,மகன்,ஊரடங்கு,புகார்

புதுடில்லி: டில்லியில் ஊரடங்கு உத்தரவை மீறும் தந்தை மீது மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3044 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. 229 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 490, தமிழகத்தில் 411, டில்லியில் 384 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.


latest tamil news



கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லி வசந்த் கஞ்ச் பகுதியில், ஊரடங்கை மீறி தினமும் தனது தந்தை வீரேந்திர சிங் (59) வெளியே செல்வதாக, அவரது மகன் அபிஷேக்(30) போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் வீட்டுக்குள்ளேயே இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்காக பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஏப்-202004:12:07 IST Report Abuse
J.V. Iyer அப்பா வேண்டாத கொரோனவை வெளியே போய் வீட்டிற்குள் கொண்டுவந்தால் பயமாக இருக்காதா? பொறுப்புள்ள மகனாக இருக்கிறாரே வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
03-ஏப்-202022:46:16 IST Report Abuse
Rameeparithi மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ... முதுமையிலும் அடங்க மாட்டிரோ ?
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
03-ஏப்-202022:00:21 IST Report Abuse
அசோக்ராஜ் இவன் தந்தை என் நோற்றான் கொல்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X