பொது செய்தி

இந்தியா

மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரணமாக ரூ. 11,092 கோடி நிதி ஒதுக்கீடு

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரணமாக ரூ. 11,092 கோடி நிதி ஒதுக்கீடு

புதுடில்லி: மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,092 கோடி அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட், மேற்கு வங்கம் ஆகியட 14 மாநிலங்களுக்கு, 15 வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின் கீழ் வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.6,195.08 கோடி உட்பட மொத்தம் ரூ.17,287.08 கோடி வழங்கப்படுகிறது.இதில்மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,092 கோடி அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news




இது தொட்ரபாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது,
மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் இருக்கும் இச்சமயத்தில் மத்திய அரசின் இந்த நிதி ஒதுக்கீடு பெரும் உதவியாக இருக்கும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
04-ஏப்-202008:43:59 IST Report Abuse
பாமரன் குடுக்க வேண்டிய பாக்கி தொகையை முதலில் குடுங்க... தமிழ் நாட்டுக்கு 2018-19 ம் ஆண்டில் வரவேண்டிய GST பங்கு 3500 கோடி ரூபாய் வச்சிக்கிட்டு ஓட்டிக்கிட்டு இருக்கீங்க....
Rate this:
Cancel
04-ஏப்-202007:15:33 IST Report Abuse
ஆப்பு நிதிக்குப் பஞ்சமே இல்லை. அச்சடிச்சுக் குடுத்துரலாம். கடையில் இன்னைக்கு பிஸ்கெட் கிடைப்பதில்லை. சிறு வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு போலாம்னா போலீஸ் முட்டுக்கட்டை. காசை வெச்சுக்கிட்டு என்ன செய்யறது மேடம்?
Rate this:
Cancel
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
04-ஏப்-202004:20:13 IST Report Abuse
SanDan தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமை இல்லாவிட்டாலும், நம் அரசும் ஏனையோரும் செய்யும் சிறந்த பணியை தரக்குறைவாகப் பேசிக் கேவலப்படுத்தாதீர்கள், தயவுசெய்து, இந்த இக்கட்டான நிலைமையில் கூட
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X