அபுதாபி லாட்டரியில் 3 இந்திய டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
abu dhabi lottery, lottery, abu dhabi lottery ticket, abu dhabi, Kerala

அபுதாபி: அபுதாபி பிக் லாட்டரி குலுக்கலில், அல் கைமாவில் வசிக்கும் 3 இந்திய டிரைவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது. அவர்களுக்கு 20 மில்லியன் திர்ஹாம் பரிசு தொகையாக கிடைக்க உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி மிகவும் பிரபலம். லாட்டரியின் பம்பர் குலுக்கல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் இன்றி, குலுக்கல் நடைபெற்றது. இருப்பினும் அதன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இதில் '041779' என்ற டிக்கெட் எண்ணுக்கு, பம்பர் பரிசு விழுந்தது. இந்த அதிர்ஷ்ட எண்ணை, அல் கைமாவில் 15 ஆண்டுகளாக வசித்து வரும் இந்திய டிரைவரான கொரோத்தன் என்பவர் வாங்கியிருந்தார். இவர் இந்தியாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தனது இரு நண்பர்களுடன் பரிசு தொகையை பகிர்ந்து கொள்வதாக கூறி உள்ளார். இவர்களும் அங்கு டிரைவர்களாக வேலை பார்க்கிறார்கள்.


latest tamil news



பம்பர் பரிசு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கொரோத்தன், இக்கடினமான மாதத்தில், அவநம்பிக்கையாக இருந்ததாகவும், தனது குடும்பத்தை திருப்பி அனுப்ப முடிவு செய்ததாகவும், இந்த வெற்றி ஒரு அதிசயம் எனவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனது மகளின் கல்விக்கும், நண்பர்களுடன் சொகுசு கார் வாடகை விடும் தொழிலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முகமூடி - ராஜகீழ்பாக்கம், செங்கை மாவட்டம்,இந்தியா
09-ஏப்-202015:41:03 IST Report Abuse
முகமூடி இந்தியன் என்ற இறுமாப்புடன் இருந்தேன் . ஆனால் தெற்கு ரயில்வேயில் அதிக அளவில் பணியாற்றி தமிழர்களின் வேலைவாய்ப்பையும் அவர்தம் மாணவர்கள் மெடிக்கல் காலேஜ் சீட்டுகளை இங்கு ஆக்கிரமிப்பதை பாக்கும்போது மலையாளி தமிழன் என்று இனம் பிரித்து உணர தொடங்கி இருக்கிறேன் மிக சுயநலம் வாய்ந்த ஒட்டுன்னிகள் இந்த மலையாளிகள்.
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
04-ஏப்-202012:49:39 IST Report Abuse
Sathish இந்தியரா.. மலையாளி என்று தானே கேரளத்தில் பீத்திக்கொள்வர்.
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
04-ஏப்-202009:43:51 IST Report Abuse
Raja தமிழ்நாட்டுல டாஸ்மாக்கை ஒழிச்சிட்டு லாட்டரிய அனுமதிக்கலாம். டாஸ்மாக்கால உயிரிழப்பு வியாதி விபத்து மூலமா வருது. குடும்பத்தில் வருமானம் இன்றி சச்சரவுகள் கொலைகள் கூட நடக்குது. லாட்டரியால சிலர் பணத்தை இழந்தாலும் சிலருக்கு வேலைவாய்ப்பு வருமானம் கிடைக்கிறது. லாட்டரி பைத்தியமாகாமல் இருந்தால் நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X