பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு, ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு! ராஜ்நாத் தலைமையில் ஆலோசனை

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
GoM_meet,RajnathSingh,Coronavirus,AmitShah,Javadekar,ராஜ்நாத்,கொரோனா_தடுப்பு,ஊரடங்கு,ஆலோசனை,ஆய்வு

புதுடில்லி: கொரோனா பரவலால் கொண்டு வரப்பட்ட, ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள நிலை மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து, மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வு நடத்தியது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ௨௧ நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், நாட்டில் நிலவும் சூழல் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து, மத்திய அமைச்சர்கள் குழு, நேற்று ஆய்வு நடத்தியது. பாதுகாப்பு துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் தலைமையில், உள்துறை அமைச்சர், அமித் ஷா, உணவுத்துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பலர் இந்த ஆய்வில்பங்கேற்றனர்.


விவாதம்:

இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா வைரசால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பதை கையாளும் வழிமுறைகள், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து, அமைச்சர்கள் விவாதித்தனர்.

ராணுவ மருத்துவமனைகளில், கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான ஐந்து மையங்கள் உள்ளதாகவும், மேலும் ஆறு மருத்துவமனைகளில், இதற்கான கட்டமைப்பு வசதிகள் தயாராக இருப்பதாகவும், பாதுகாப்புத்துறை தெரிவித்தது. அத்துடன், தீவிர சிகிச்சை பிரிவுகள் உள்ளிட்ட வசதிகளுடன், 51 ராணுவ மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சைக்கு தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

சென்னை, மும்பை, ஜெய்சால்மர், ஜோத்பூர், ஹிண்டன், மானேசர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில், தனிமை வார்டுகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே, நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, நேற்றைய நிலவரப்படி, 2,301 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 55 பேர் வெளிநாட்டினர். மஹாராஷ்டிராவில், மேலும் மூன்று பேர் இறந்த நிலையில், நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை, 56 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு மற்றும் பலியானோர் எண்ணிக்கையில், மஹாராஷ்டிரா, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில், 335 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16 பேர் பலியாகி உள்ளனர்.


தொடர்ந்து அதிகரிப்பு:

பாதிப்பில், தமிழகம், 309 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கேரளாவில், 286; டில்லியில், 219; ராஜஸ்தானில், 133; ஆந்திராவில், 132; உ.பி.,யில், 113 என, மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சிக்கிம் மாநிலத்தில், இதுவரை கொரோனா தொற்று ஒருவருக்கு கூட பரவவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில், 35 பேரிடம் ரத்தமாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், யாருக்கும் பாதிப்பு இல்லை என, தெரியவந்துள்ளதாக, அம்மாநில, சுகாதார சேவைகள் துறை இயக்குனர் புடியா தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
04-ஏப்-202011:02:07 IST Report Abuse
J.Isaac ஆப்பு இவங்களுக்கு விளக்கு வைக்க போறாங்க.
Rate this:
Cancel
04-ஏப்-202010:24:29 IST Report Abuse
ஆப்பு ஆலோசனை நடத்துற ஒரு ஆள் கூட மாஸ்க் அணியவில்லை. எங்க ஊரில் என்னடான்னா போலீசே மாஸ்க் அணியலேன்னா வெளியே வராதேன்னு லத்திய ஓங்குது. ஓஹோ இவிங்க உள்துறை அமைச்சகமா? உள்ளேயே இருப்பாய்ங்களோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X