'யதார்த்த நிலையை உணர வேண்டும்': எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (61)
Share
Advertisement
shashitharoor,MahuaMoitra,KapilSibal,PM,Modi,பிரதமர்,மோடி,கபில்சிபில்,சசிதரூர்

'வெறும் நம்பிக்கை சார்ந்த குறியீடுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல், யதார்த்த நிலையை உணர வேண்டும். அறிவார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளை பிரதமர் மோடி கேட்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து உள்ளன.


வெளிச்சம் ஏற்படுத்துங்கள்:

பிரதமர் நரேந்திர மோடி, ''வரும், 5ம் தேதி இரவு, 9:00 மணியளவில், வீடுகளில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்குகள், மெழுகுவர்த்திகள், செல்போன் டார்ச் லைட்டுகள் வாயிலாக, 9 நிமிடங்களுக்கு வெளிச்சம் ஏற்படுத்துங்கள்,'' என, 'டிவி'யில் பேசினார்.

பிரதமரின் இந்த பேச்சு வெளியான சில நிமிடங்களிலேயே, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும், கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். திரிணமுல் காங்., -எம்.பி., மகுவா மொய்த்ரா தன் டுவிட்டரில், 'விளக்குகளை அணைத்துவிட்டு, பால்கனிக்கு வர வேண்டுமா மோடி அவர்களே... யதார்த்த உலகிற்கு, நீங்கள் தான் வர வேண்டும். முதலில், நாட்டின் பொருளாதார நிலையை சரிசெய்ய நிதி உதவி தாருங்கள். 'தினக்கூலி தொழிலாளர்களுக்கு, ஊரடங்கு நாட்களுக்கான ஊதியத்தை தர முயற்சியுங்கள். போலியான பேச்சுக்கள் மூலம், நிஜ பிரச்னைகளை மறைக்கும் வேலையை நிறுத்துங்கள்' என, பதிவிட்டுள்ளார்.

காங்., மூத்த தலைவர் சசி தரூர், 'மக்களின் காயங்களை துடைக்கவோ, அவர்களின் பாரங்களை இறக்கவோ, அவர்களின் பொருளாதார எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவோ, பிரதமரின் உரை தவறிவிட்டது. 'ஊரடங்கிற்கு பிந்தைய திட்டமிடல், எதிர்கால பிரச்னைகள் குறித்து, பிரதமர் யோசிப்பதாக தெரியவில்லை. தற்காலிக மகிழ்ச்சிக்கான தருணங்களை தரும், பிரதமராகவே மோடி உள்ளார்' என, குறிப்பிட்டுள்ளார்.


எந்த கவலையும் இல்லை:

முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தன் டுவிட்டர் பதிவில், 'ஏழைகளுக்கு உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவது குறித்தோ, நம்டாக்டர்களை பாதுகாப்பது குறித்தோ, அவர்களுக்கு தேவையான மருத்துவ கருவிகளை வழங்குவது குறித்தோ, பிரதமருக்கு எந்தவொரு கவலையும் இல்லை. 'மூடநம்பிக்கைக்காக விளக்கேற்ற வேண்டிய அவசியமில்லை' என, குறிப்பிட்டுள்ளார்.


பிரதமரை ஆதரிக்கும் காங்., தலைவர்கள்:

மத்திய அரசின், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை, காங்., மூத்த தலைவர்கள் பாராட்டி வருவது, கட்சி மேலிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மத்திய அரசு பிறப்பித்துள்ள, 21 நாள் ஊரடங்கு குறித்து, காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர், விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

மக்கள் ஊரடங்கின் போது, கைகளை தட்டுமாறு, பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை, ராகுல் கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசை, எப்போதும் விமர்சித்து வரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், கொரோனா விவகாரத்தில், மோடியின் நடவடிக்கைகளுக்கு, ஆதரவு தெரிவித்து வருகிறார். 'ஊரடங்கை எதிர்ப்பவர்கள், அடுத்த, 21 நாட்களுக்கு அமைதி காப்பது நலம்' என, அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும், ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், லோக்சபா எம்.பி., சசி தரூர் உள்ளிட்ட மூத்த காங்., தலைவர்களும், பிரதமரின் நடவடிக்கைகளுக்கு, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இது, காங்., மேலிடத்தை கொந்தளிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, காங்., தலைமைக்கும், அதன் மூத்த தலைவர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மூத்த காங்., தலைவர்கள் மற்றும் ராகுல் இடையே, கருத்து வேறுபாடு ஏற்படுவது புதிதல்ல என்றும், இக்கட்டான சூழலில் நாடு சிக்கித் தவிக்கும் போது, மத்திய அரசை விமர்சிப்பது முறையல்ல என, காங்., மூத்த தலைவர்கள் பலரும் நினைப்பதாக, கூறப்படுகிறது. மேலும், ராகுலை மீண்டும் கட்சி தலைவராக்கும் முயற்சியில் சோனியா இறங்கியதை அடுத்து, கட்சி தலைமைக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே, உரசல் அதிகரித்துள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
05-ஏப்-202017:49:15 IST Report Abuse
Swaminathan Chandramouli நாட்டு நடப்பை பற்றித்தான் பதிவு செய்யப்படுகிறது நீங்கள் காங்கிரஸ் பக்கமோ
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
05-ஏப்-202017:47:20 IST Report Abuse
Swaminathan Chandramouli அரசை குற்றம் சொல்லுவதே வேலை . எதிர் கட்சிகள் என்றால் குழப்பமான சூழ்நிலையில் அரசுக்கு ஆதரவாக உதவியாகவும் இல்லாமல் எப்போ சந்திலே சிந்து பாடலாம் என்று எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற தீய நோக்கத்தில் பார்வையை செலுத்தினால் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்
Rate this:
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
05-ஏப்-202012:43:04 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao மாஸ் (கூட்டுப்) பிரார்த்தனை நேரு காலத்தில்தான் ஆரம்பித்தது. மஹாத்மா காந்தியின் படுகொலைக்காக ஒவ்வொரு வெள்ளி மாலை சங்கு ஊதும், மக்கள் அமைதியாக நிற்கவேண்டும், ஜனவரி 30 ஆம் நாள் தியாகிகள் தினமன்று காலை 11 மணிக்கு சங்கு ஊதும், அனைத்து வாகனங்களும் இரண்டு நிமிடம் அங்கங்கே நிற்க வேண்டும் என்ற பழக்கத்தைக் கொண்டு வந்தது யார்?
Rate this:
karutthu - nainital,இந்தியா
07-ஏப்-202016:52:46 IST Report Abuse
karutthuஇப்படியே பேசினால் கொரோன நமக்கு சங்கு ஊதிவிடும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X