சீனாவின் மாமிச சந்தைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆஸி பிரதமர் வலியுறுத்தல்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

மெல்பெர்ன்: கொரோனா பரவ காரணமாக இருந்த சீன மாமிச சந்தைகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸி பிரதமர் ஸ்காட் மோரிஸன் கேட்டுக் கொண்டுள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, ' இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா முதன் முதலாக சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கியது.இதுவரை
58 ஆயிரத்தற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு உலகம் முழுவதும் பலியாகி உள்ளனர்.
10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



இத்தகைய கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் சீனாவி்ன் வெட் மாமிச சந்தைகளுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். சீன மாமிச சந்தைகள் உலக நாடுகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக உள்ளன' இவ்வாறு அவர் தெரிவித்தார்

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
04-ஏப்-202013:26:01 IST Report Abuse
Rajas ஆஸ்திரேலியா சீனாவிடம் வகையாக மாட்டி கொண்டிருக்கிறது. உணவு பொருட்களை ஏற்றுமதி செய்த ஆஸ்திரேலியாவிற்கு முதலில் டாலர் கொடுத்த சீனா, பல கோடி நிலுவையில் வைத்து இப்போது மருத்துவ பொருளாக தான் தருவோம் என்று சொன்னது. கொரனவிற்க்காக ஒப்பு கொண்ட அஸ்த்திரேலியாவிற்கு சீனா அனுப்பிய பொருட்களில் 40 % தரம் கெட்ட பொருட்கள். திரும்பி அனுப்புவதாக சொன்னதற்கு சீனா ஒப்பு கொள்ளவில்லை. இன்னொரு புறம் பொருளாதாரத்தில் சிக்கலில் இருக்கும் அஸ்த்திரேலியா கம்பனிகளை சீனா விலை பேசி வருகிறது
Rate this:
Cancel
VCK ALI BHAI - CHENNAI,இந்தியா
04-ஏப்-202012:56:33 IST Report Abuse
VCK ALI BHAI எந்த விலங்கை சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாதுன்னு என்று இஸ்லாம் சொல்கிறது. குருவி, புறா சாப்பிட சொன்ன இஸ்லாம் கிளி , காக்கா சாப்பிட தடை விதித்துள்ளது. சாமானியர்களுக்கு குருவி, கிளி ஒன்றுதான். ஆனால் இதை இஸ்லாம் வேறுபடுத்தி காட்டுகிறது.
Rate this:
Cancel
P R Srinivasan - Chennai,இந்தியா
04-ஏப்-202011:16:00 IST Report Abuse
P R Srinivasan எல்லாவற்றையும் சாப்பிட்டு உயிர் வாழலாம் என்பது தவறாகிறது. மனித இனம் ஆறறிவு படைத்த இனம். எதை சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்று பகுத்தறிந்து உண்ணவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X