சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

முதலில் அவர் திருந்தட்டும்!

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 முதலில் அவர் திருந்தட்டும்!

'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காய்கறி மார்க்கெட், பஸ் நிலையத்திற்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. குறிப்பிட்ட இடைவெளியில், காய்கறிக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

திருத்தணி, எம்.எல்.ஏ., நரசிம்மன், 10க்கும் மேற்பட்ட, தன் ஆதரவாளர்களுடன், ஆய்வு என்ற பெயரில், பஸ் நிலையத்தில் இருந்த, தற்காலிக காய்கறி கடைகளை பார்வையிட்டார். ஆணையர், நகராட்சி அலுவலர்கள், எம்.எல்.ஏ.,வை வரவேற்று, அவருடன் ஆய்வுக்கு சென்றனர்.

வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்த, எம்.எல்.ஏ., நரசிம்மன், அங்கு வந்த பொதுமக்களிடம், 'கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, 1 மீ., இடைவெளியில் நின்று, பொருட்களை வாங்க வேண்டும்; கூட்டமாக வரக்கூடாது' என, கூறினார்.

அங்கிருந்த வியாபாரி ஒருவர், 'நமக்கு அறிவுரை சொல்லுறது இருக்கட்டும்... முதல்ல இவரு, தன் படைகளுடன் சுற்றவதை நிறுத்தினால், நல்லது' என்றார். சுற்றியிருந்தோர், கமுக்கமாக சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-ஏப்-202006:03:35 IST Report Abuse
D.Ambujavalli எம் எல் ஏவிடமிருந்தும் அவரது படை, பட்டாளங்களிடமிருந்தும் கொரானாவே தன்னை க்வாரன்டைன் செய்துகொண்டுவிடும் என்ற நம்பிக்கையாக இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X