ஐதராபாத்: தெலுங்கானாவில், ஊரடங்கு உத்தரவை மீறி பைக்கி்ல் வந்தவர்களை தடுத்த போலீஸ் அதிகாரியின் சட்டையை பிடித்து பெண் தகராறு செய்த சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் லாலாபட் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே பைக்கில் பெண் தனது மகன், மற்றொருவர் என மூன்று பேர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் ஊடரங்கை மீறியதற்காக வழக்குப்பதிந்து அபராதம் வசூலித்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த பெண், பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவரின் சட்டை பிடித்து இழுத்து தகராறு செய்தார். சக போலீசார் முன்னிலையில் சீருடை அணிந்த போலீஸ் அதிகாரியின் சட்டையை பிடித்த இழுத்து வாக்குவாதம் செய்த காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE