சீனாவில் துக்க நாள் அனுசரிப்பு: மக்கள் மவுன அஞ்சலி

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
பீய்ஜிங்: சீனாவில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், இன்று துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுதும், கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை, 50 ஆயிரத்தை தாண்டியிருப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.இந்த வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய
coronavirus, corona, coronavirus death, China, wuhan, covid-19, mourning day, சீனா, துக்க நாள், அனுசரிப்பு

பீய்ஜிங்: சீனாவில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், இன்று துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுதும், கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை, 50 ஆயிரத்தை தாண்டியிருப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.


latest tamil news
இந்த வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், 81 ஆயிரத்து, 620 பேர்,பாதிக்கப்பட்டனர். அதில், 3,322 பேர் உயிரிழந்துள்ளனர். 76 ஆயிரத்து, 571 பேர், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். மீதமுள்ள, 1,727 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர, அறிகுறிகள் இன்றி, 1,027 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதில், வெளிநாடுகளில் இருந்து வந்த, 22 பேரும் அடங்குவர். இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள தங்கள் மக்களை, நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையில், சீனா இறங்கியுள்ளது. வெளிநாடுகளில் படிக்கும் சீன மாணவ - மாணவியர், அதிக எண்ணிக்கையில், நாடு திரும்பி வருகின்றனர்.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில், மொத்தம், 800 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. அதில், பாதிக்கும் மேல், சீன மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், சீனாவில், இன்று துக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுதும் உள்ள தேசிய கொடிகள், அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாட்டு மக்கள், இன்று காலை, 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு மக்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-ஏப்-202014:42:52 IST Report Abuse
Natarajan Ramanathan தனது தாய் தந்தையை கொன்ற ஒருவன் நீதிபதியிடம் தான் அனாதை என்பதால் மன்னிக்கும்படி வேண்டியதுபோல இருக்கு
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
04-ஏப்-202014:22:36 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga தெரிந்தோ தெரியாமலோ சீனாவில் தயாரித்த தரமில்லா பொருட்களை குறைந்த விலையில் அமெரிக்கா தொடங்கி உலக நாடுகள் பலவும் அந்த பொருட்களை தன்னுடைய நாட்டில் தயாரிக்க மறந்து விட்டன. நம்முடைய பிரதமர் கொண்டுவந்த "மேக் இன் இந்தியா" திட்டம் போல எல்லா நாடுகளும் சுய உற்பத்தி செய்து சீனாவிலிருந்து இறக்குமதியை முற்றிலும் தவிர்த்து தடை செய்ய வேண்டும். அப்போதுதான் சீன இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடாது. சீனாவின் இந்த செயலால் உலக பொருளாதாரம் மட்டுமில்லாமல், வேலை இழப்பு அதிகரித்து மக்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விட்டது. இது உலக வல்லரசு நாடுகள் மட்டுமின்றி சிறிய பெரிய நாடுகளுக்கும் ஒரு படிப்பினை. ஆனால் நம் பாரதம் இதிலிருந்து மீண்டு அசுர வளர்ச்சி பெரும். வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
04-ஏப்-202012:41:56 IST Report Abuse
Sathya Crocodile tears by the Chinese Communist Party. They spread the Virus and they... stop all Chinese products
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X